உலகம் அதன் காலப் போக்கில் நகர்ந்து கொண்டிருக்கும் ஆனால் எப்போதும் ஒரு இஸ்லாமிய சமுகத்தை சார்ந்த பெயர்கள் வெளிவருகிறதோ அப்போது ஊடகங்கள் விழித்துக் கொண்டு சமந்தமே இல்லாத ஆதிகாலத்து கல்லறைகள் வரை தோண்டப்படட்டு இணைக்கப்படும்.
ஆதி முதல் திட்டமிட்டபடி ஊடகங்கள் வழியாக எல்லா திரைப்படங்களில் தீவிரவாத செயல்கள் என்றாலே ஒரு இஸ்லாமியர் காட்சிபடுத்தப்பட்டு, அதைத் தொடர்ந்து அதற்கேற்ப சமுதாயத்திலும் திரையில் காட்டியதைப் போன்று சித்தரித்து மக்களிடம் சேர்க்க பட்டது.
யார் செய்தாலும் தவறு தவறே.. எந்த சமுகமாக மக்களாக இருந்தாலும் சரி அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் குறிப்பிட்ட சமுகத்தை மட்டும் தாக்குவதேன் என்கிற கேள்விக்கு பதில்தான் என்ன?