Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

இஸ்லாமும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரும்
Oct 29 2022 காலக்கண்ணாடி

இஸ்லாமும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரும்

பசும்பொன் முத்துராமலிங்கதேவர் அவர்கள்!

பெற்றெடுத்த தாய் இறந்திடவே  ஆயிஷாபீவீ அம்மாள் என்ற இஸ்லாமியத் தாயிடம் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்! இந்தத் தாய் இறந்தபோது தேவரய்யா வருவார்; கைது செய்துவிடலாம் எனக் காத்திருந்த காவல்துறைக்கு சவாலாக மாறுவேடத்தில் வந்து ஜனாஸாவைப் பார்த்துச் சென்ற பாசமிக்கவர்!

முதலில் இவர் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமே ஆன தலைவர் என அடையாளப்படுத்துவதே தவறு!

காங்கிரஸால் சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் ஓரங்கட்டப்பட்டபோது இந்தியாவில்  சுபாஷ் சந்திரபோஸ் அவர்களால் நிறுவப்பட்ட பார்வார்டு பிளாக் கட்சியின் அகிலஇந்திய துணைத்தலைவராக மட்டுமின்றி, மதறாஸ் மாகாணத்தின் தலைவராக இருந்தவரை எப்படி ஜாதித் தலைவராக அடையாளப்படுத்த முடியும்?

இவர் அனைத்து சமூகத்திற்கான தலைவர் ஆவார்!

பிரிவினையின் போது தமிழக முஸ்லீம்கள் நம் தாய் தமிழகத்தை விட்டு போகக்கூடாது என அன்புக்கரம் நீட்டியவர்!

இஸ்லாமியர்களை எதிர்த்தவர்களை தீரமாக எதிர்த்த மாவீரர்!

சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் INA படைக்கு தமிழகத்தில் இருந்து பெரும்படையை திரட்டி அனுப்பியவர் தேவரய்யா அவர்கள்!

அந்த INA படைக்கு எதிராகவும், பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆதரவாகவும் பெரும்படையைத் திரட்டிய RSSகாரர்களின் அரசியல் பிரிவான பிஜேபியில் தேவரின் இனத்தில் சிலர் மட்டும் பயணிப்பதுதான் முரணாக உள்ளது!

1937இல் ராமநாதபுரத்தில், ராமநாதபுரம் ராஜாவை எதிர்த்துப் போட்டியிட்டு ஜெயித்தவர்!

1939இல் RSSன் பார்ப்பனர்கள், தலித்கள் ஆலயப் பிரவேசம் செய்யக்கூடாது என எதிர்த்தபோது, மிக தைரியமாக ஐந்து தலித்களை அழைத்துக்கொண்டு மதுரையில் மீனாட்சியம்மன் ஆலயத்தில் நுழைந்து அம்மனை வணங்கினார்!

1940இல் தன்னால் வளர்க்கபட்ட காங்கிரஸால் 18மாதம் சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வரும்போது, சிறை வாசலிலேயே தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்!

1945ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டவுடன், 1946இல் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்!!!

இந்த வெற்றிக்கு பிறகு குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட காரணமானவர்!

1948இல் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான பார்வார்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவரானார்!

1957இல் பாராளுமன்ற உறுப்பினரான தேவரய்யா அவர்களை ஒரு கொலை வழக்கில் கைது செய்து, இரண்டு வாரத்திற்குப் பிறகு முதல் குற்றவாளியாக FIR பதியப்பட்டு, பின்பு இவரை இந்த வழக்கில் சந்தேகிக்க கூட முடியவில்லை என நீதிமன்றம் விடுதலை செய்தது!

1963இல் அக்டோபர் 29ந்தேதி அதிகாலை 5மணியளவில் இயற்கை எய்தினார்!

மறுநாள் 30ந்தேதி #வள்ளலார் அவர்களுக்குச் செய்த முறைப்படி அமரவைத்து பூஜை செய்து நல்லடக்கம் செய்யப்பட்டார்!

அந்த மகானை நினைவுகூர்வோம்!