அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் மீலாது விழா மற்றும் தப்ஸீர் அஷ்ஷஃராவீ வெளியீட்டுவிழா.
அபுதாபி: 29-10-2022 சனிக்கிழமை அன்று மாலை 7:00 மணியளவில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் -MAK தொகுத்து வழங்க, மாணவர் லால்பேட்டை நிஸ்வான் அஹ்மத் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
சங்கத்தின் துணைத் தலைவர் மதுக்கூர் Y. M. அப்துல்லாஹ் அவர்கள் வரவேற்பு வழங்கினார். அய்மான் சங்கத் தலைவர், கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் தலைமை வகித்து தலைமை உரை வழங்கினார்.
பைத்துல்மால் தலைவர் அதிரை A. ஷாஹுல் ஹமீது ஹாஜியார் அவர்கள் முன்னுரை வழங்கினார்கள்.
மௌலானா மௌலவி ஆடுதுறை தலைமை இமாம் E.ஷாகுல் ஹமீது தாவூதி அவர்கள் மீலாது முன்னுரை வழங்கினார்கள்.
துபாய் ஜமாஅத்துல் உலமா தலைவர் பெரம்பலூர் மௌலானா மௌலவி தாவூத் அலி ஹஸ்ரத் அவர்கள் தஃஸீர் அஷ்ஷஃராவீ முன்னுரை விளங்கினார்.
#தப்ஸீர் வெளியீடு
அய்மான் சங்கத் தலைவர்கள், துணை தலைவர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி & மௌலவி M.Y.முஹம்மது அன்சாரி மன்பயீ இணைந்து வெளியிட
முதல் பிரதியை பணியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் குழுமத்தின் இயக்குனர் ஜனாப் முஹம்மது அலி ஹாஜியாரும்,
இரண்டாவது பிரதியை சிங்கப்பூர் ஹவுஸ் நிறுவனர் P. A. ஜெகபர் அலி மன்பஈ & அமீராக காங்கிரஸ் தலைவர் A. S. அப்துல் மாலிக்,மூன்றாவது பிரதியை தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவர் திரு சிவகுமார் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
அதனை தொடர்ந்து, அபுதாபி தமிழ் மக்கள் மன்றத்தின் தலைவர் திரு சிவகுமார், அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரின் (IIC) பொருளாளர் ஜனாப் அபூபக்கர் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர், லால்பேட்டை தப்ஸீர் அஷ்ஷஃராவீ மொழி பெயர்ப்பாளர் மௌலானா மௌலவி M.Y.முஹம்மது அன்சாரி மன்பயீக்கு பொன்னாடை அணிவித்து அய்மான் சங்கத்தின் நினைவு பரிசு வழங்கப்பட்டு அவர்கள் சிறப்புரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அபுதாபி ஜமாத்துல் உலமா சபை, அபுதாபி மௌலிது கமிட்டி, முஸ்லீம் கல்வி இயக்கம், அபுதாபி லால்பேட்டை ஜமாத் , மர்ஹபா சமூக நல பேரவை, அபுதாபி தமிழ் மக்கள் மன்றம் ,அமீரக காயிதே மில்லத் பேரவை, துபாய் ஈமான், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்