இமயமலை முதல் குமரிமலை வரை பரந்திருந்த ஒரு கண்டம் முழுவதும் வாழ்ந்த தமிழர் இன்று ஏதோவொரு மூலையில் யாரோ ஒருவரைப்போல வாழ்கிறோம்.
ஆனால் மரபணு ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி. மொழி ஆராய்ச்சி என மூன்றுவழியிலும் நாமே மூத்தகுடி என்பதற்கு சான்றுள்ளது.
'இந்தியா முழுவதும் தமிழருடையது என்பதற்கான சான்றுகள் இந்திய அரசால் பெரும்பாலும் அழிக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் பிறரறியா வண்ணம் ஆக்கப்பட்டுவிட்டன.
ஆனால், மூழ்கிய குமரிக்கண்டம் நமது பழமையான நாகரீக சான்றுகளுடன் பாதுகாப்பாக கடலுக்குள் இருக்கிறது. நம் வரவை, காத்திருக்க தனது மக்களின் வரவை எதிர்பார்த்து அது கடலுக்குள் காத்திருக்கிறது.
எனவே இந்தியாவில் உள்ள மக்களிடமும் அரசிடமும் எஞ்சியுள்ள சான்றுகளை காட்டி 'தமிழ் மொழியை வெறும் 3000 ஆண்டுகள் பழமையானது என்றாவது ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று பேரம் பேசுவதில் குறியாக இருக்கும் நாம், இனியும் அந்த வீண்முயற்சியைச் செய்யாமல் கையில் இருக்கும் நிலத்தையாவது அரணமைத்து தனிநாடாக்கி இனத்தை அழிவிலிருந்து காத்து பொருளாதாரத்தைப் பெருக்கவேண்டும்.