Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

விண்வெளியில் 450 டன் - இது மனிதனால் செய்யப்பட்ட பறக்கும் தட்டு - INTERNATIONAL SPACE STATION (ISS)
Nov 04 2022 நாடும் நடப்பும்

விண்வெளியில் 450 டன் - இது மனிதனால் செய்யப்பட்ட பறக்கும் தட்டு - INTERNATIONAL SPACE STATION (ISS)

ஹாய் நண்பர்களே...

 

இன்னிக்கு ஒரு சுவாரஸ்யமான விஷயத்த பார்ப்போமா...

 

உங்களுக்கு தெரியுமா...

 

நம்ம பூமிக்கு சரியா 360 KM உயரத்துல 450 டன் வெயிட்ல ஒரு மிகப்பெரிய ஆய்வகம் ஒன்னு மிதந்துகிட்டே இருக்குன்னு சொன்னா நம்ப முடியுதா...?

 

அட ஆமாங்க...

பூமில இருந்தே மனிதர்கள் விண்வெளிய ஆராய்ச்சி பண்றது, இந்தியால உக்காந்துகிட்டு அமெரிக்காவ ஆராய்ச்சி பண்ற மாதிரி...

அதுக்குன்னு நாம பூமியை தாண்டி வேற கிரகங்களுக்கு போய் ஆராய்ச்சி பண்றதும் கஷ்டம்...

அதனால பூமியை தாண்டி ஒரு 360 KM தூரத்துல மிக பிரம்மாண்டமா ஒரு மிதக்கும் ஆய்வு கூடத்த அமைச்சா என்னன்னு நினைச்சி 1998 ல உருவாக்கப்பட்டது தாங்க இந்த International Space Station... (கிட்டத்தட்ட என்னோட வயசு தான்)

Picture Credit - Digital Public Library of America

விண்வெளி ஆராய்ச்சி உலகத்துல ஒவ்வொரு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு இருந்த சமயத்துல தான்,

இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன அமேரிக்கா, ரஷ்யா, கனடா, ஐரோப்பா, ஜப்பான், இத்தாலி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் சேர்ந்து கட்டி எழுப்புனாங்க....

இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒரு செகண்டுக்கு 5 மைல் அப்படிங்கற ஸ்பீடுல ஒவ்வொரு 90 நிமிஷத்துக்கும் ஒரு முறை உலகத்த சுத்தி வருதுங்க...

நாம நைட் டைம்ல வெறும் கண்ணாலேயே இத பார்க்க முடியும், சின்னதா நட்சத்திரம் மாதிரி மின்னிக்கிட்டே ஸ்பீடா போகும்...

நான் பாத்து இருக்கேங்க...நீங்க பாத்திருக்கீங்களா ??

Picture Credit - Earth Sky

 

நிலாவுக்கு அடுத்த படியா பூமில இருந்து மிக வெளிச்சமாக தெரியுற ஒரு பொருள் இது தாங்க...

 

நீங்க பாக்கணும்னு விருப்பபட்டிங்கன்னா நாசாவோட இந்த வெப்சைட்ல நம்ம ஊருக்கு எப்ப வரப்போகுத்துன்னு தெரிஞ்சிகிட்டு நைட் விழிச்சிருந்து பாருங்க...செம்மயா இருக்கும் https://spotthestation.nasa.gov/sightings/index.cfm

 

இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் பூமிய ஒரு நாளைக்கு 16 தடவை சுத்தி வரதுங்கறதால இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன்ல ஒரு நாளைக்கு 16 தடவ சூரியன் உதிக்கும், மறையும்...

 

இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன் 375 அடி நீளமானதுங்க...

Picture Credit - NASA

 

இதுல எப்பவுமே இரண்டு பேராச்சும் வேலை செஞ்சிகிட்டே இருப்பாங்க...

 

இதுல 2 பாத்ரூம், 6 தூங்கும் அறைகள், ஒரு GYM னு எல்லாமே இருக்கு...

 

ஏம்பா சல்மான், பாத்ரூம், பெட்ரூம் ஒகே...

அது எதுக்கு GYM..? அங்க அது தேவையான்னு கேக்குறீங்களா...??

 

அங்க வேலை செய்யுற ASTRONAUTS ஒவ்வொரு ரெண்டு மணி நேரத்துக்கும் WORKOUT பண்ணியே ஆகனும், அப்பதான் அவங்க MUSCLES அ SHAPE ஆ வச்சுக்க முடியும்...இல்லன்னா அதோகதி தான்...

 

இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன்ல 50க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்ஸ் இருக்கு...

அங்க WIRING செய்ய 8 மைல் அளவுக்கான WIRE அ பயன்படுத்தி இருக்காங்களாம்...(எலக்ட்ரிஷியன் பாவம்ல)

Picture Credit - NASA

 

இங்க இதுவரைக்கும் 18 நாடுகள சேர்ந்த 230 பேர் வந்து ஆராய்ச்சிகளை செஞ்சிட்டு போயிருக்காங்க...

 

இதுல 9 பேர் முஸ்லிம்கள், இங்க முஸ்லிம்கள் தொழுகை நடத்துவது எப்படி, WAZU, TAYYAMMAM செய்வது எப்படி, எந்த திசையை நோக்கி தொழுவது, நோன்பு நோற்பது, ஹலால் உணவு என பல்வேறு GUIDELINES ஐ மலேஷிய அரசு தமது விண்வெளி வீரர்களை அனுப்பும் போது வெளியிட்டது...அங்கு தொழுகையும் நடந்துள்ளது...

மலேசிய விண்வெளி வீரர் - Dr. ஷேக் முஸஃப்பர் ஷுகூர் (தொழுகும் போது) 

 

இதுக்குள்ளே எதாச்சும் ரிப்பேர் பண்ணனும்னா உள்ள இருந்தே பண்ணிடுவாங்க...ஆனா வெளியே எதாச்சும் ரிப்பேர் ஆச்சுனா வெளிரே SPACE SUIT போட்டுகிட்டு மிதந்து கிட்டு வந்து தான் பண்ணனும், அத SPACE WALK னு சொல்லுவாங்க...

Picture Credit - NASA

 

இந்த மாதிரி SPACE WALKS இது வரைக்கும் 205 தடவ நடந்துருக்கு...

 

நம்ம இந்தியால இருந்து ராகேஷ் சர்மா இதே மாதிரி ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன்ல போய் 7 நாள் தங்கி ஆராய்ச்சிகள செஞ்சிருக்காருங்க...

Picture Credit - REDDIT

 

என்னாப்பா சொல்ற இதே மாதிரியா...அப்ப இது மட்டும் அங்க இல்லையா, இன்னும் நிறைய ஸ்பேஸ் ஸ்டேஷன்ஸ் இருக்குதான்னு கேட்டா...ஆமாங்க இருந்துச்சு, இருக்குது, இன்னும் கட்டப்பட்டு சுத்த வைக்கப்பட இருக்குது...

ஆனா இது வரைக்குமான ஸ்பேஸ் ஸ்டேஷன்ல இது தான் பெருசு, இது தான் ULTIMATE...

450 டன்...320 கார்கள் அளவுக்கு பெருசுன்னா புரிஞ்சிக்கோங்க...

இந்த ஸ்பேஸ் ஸ்டேஷன்ல விண்வெளி வீரர்கள் தங்கி வேலை பாக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்ங்க...

Picture Credit - NASA TV

 

அதுவரைக்கும் இத உங்க நண்பர்கள், உங்களுக்கு தெரிந்த மாணவ மாணவிகளுக்கு ஷேர் பண்ணுங்க...

பள்ளிகூடங்கள்ல, கல்லூரிகள்ல படிக்கிறதால மட்டும் இது மாதிரியான SCIENCE FACTS தெரிஞ்சிக்கிறது கஷ்டம்...

அதுக்கு நாம நம்ம பிள்ளைகளுக்கு இணையதளத்த இந்த மாதிரி நல்ல விஷயங்களை EXPLORE பண்ண கத்து கொடுக்கனும்...

இது மாதிரியான அறிவியல் விஷயங்களை, நாட்டு நடப்புகளை, செய்திகளை படிக்க, தெரிந்து கொள்ள நம்ம சுட்டுவிரல் SuttuViral செயலியை பதிவிறக்கம் செய்யவும்...
லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.suttuviral.app

சரிங்க இன்னிக்கு இவ்ளோதான்....BYE BYE...

Related News