சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து 3 கி.மீ. துாரத்தில், கொட்டிப்பள்ளம் நீரோடை அருகே சிங்கிபுரம் ஊராட்சி பழனியாபுரம் காலனி எல்லை வனப்பகுதியில், சடாமுனி, வால்முனி, செம்முனி ஆகிய ராட்சத உருவம் கொண்ட 3 முனியப்பன் சிலைகளும் 200 ஆண்டுகள் பழமையான அஞ்லான்குட்டை முனியப்பன் கோவிலில் அமைந்துள்ளது.
இரவு நேரத்தில் ‘முனி’ உலவுவதாகவும், குறி சொல்லும் குடுகுடுப்பை வேட்டுவர்கள் சக்தி திரட்டுவதாகவும் நம்பிக்கை தொடர்வதால், இக்கோயிலுக்கு பெண்கள் செல்வதில்லை. மேலும் ஆண்கல் படைத்த பொங்கல், சமைத்த கறியையும் பெண்கள் சாப்பிடுவதில்லை. அதுமட்டுமின்றி விபூதியை கூட பெண்கள் வைத்துக் கொள்வதில்லை.
வாழப்பாடி பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோயில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று (04/11/2022) காலை நடைபெற்றது. மேலும் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டல அபிஷேக பூஜைகள் நடத்திடவும், அஞ்சலான் குட்டை முனியப்பனை குல தெய்வமாக வணங்கி வரும் இப்பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர்.