Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

கவிஞர் அல்லாமா முஹம்மத் இக்பால்
Nov 09 2022 கலை இலக்கியம்

கவிஞர் அல்லாமா முஹம்மத் இக்பால்

சிந்தனையாளர், தத்துவவாதி, உருதுக் கவிஞர் அல்லாமா முஹம்மத் இக்பால்!

(9/11/1877 - 21/4/1938).

Khudhi ko kar bulandh ithnaa,

Ki har thaqdheer se pehle,

Khudhaa bandhe se khudh pooche

Bathaa thaeri razaa kiyaa hai!

குதி கோ கர் புலந்த் இத்னா, கி ஹர் தக்தீர் ஸே பெஹலே குதா பந்தா ஸே குத் பூசே பதா தேரி ரஸா கியா ஹை!

உன்னை வெற்றியாளனாக உருவாக்கிக் கொள் (எவ்வளவு எனில்) உன்னுடைய விதிப்படி நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் முன்பாக இறைவனே உன்னிடத்தில் உன் கருத்து என்ன எனக் கேட்கும் அளவுக்கு உன்னை வெற்றியாளனாக ஆக்கிக்கொள்!

மேற்கண்ட அந்தக் உருதுக் கவிதையை இயற்றியவர் அல்லாமா முஹம்மத் இக்பால் அவர்கள்.

பஞ்சாபின் சியால்கோட்டில் ஒரு காஷ்மீரி முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த இக்பால், லாஹூரில் உள்ள அரசுக் கல்லூரியில் BA மற்றும் MA முடித்தார். அவர் 1899 முதல் 1903 வரை லாஹூரிலுள்ள ஓரியண்டல் கல்லூரியில் அரபு மொழி கற்பித்தார். அப்போது அவர் கவிதை, கட்டுரை என ஏராளமாக எழுதினார். அப்போது அவர் எழுதிய கவிதைகளில் பிரபலமானது பரிந்தே கி ஃபர்யாத் (பறவையின் இறைஞ்சுதல்). இது விலங்கு உரிமைகள் மீதான அவரது சிந்தனையின் வெளிப்பாடாகும். தரானா-ஏ-ஹிந்த் (இந்தியாவின் பாடல்) என்ற நாட்டுப்பற்று கவிதையொன்றையும் எழுதினார். இவ்விரண்டும் குழந்தைகளுக்காக இயற்றப்பட்டவை. 1905ல் ஐரோப்பாவில் மேற்படிப்பு படிக்கப் புறப்பட்டார். முதலில் பிரிட்டன் சென்றார். அங்கு அவர் கேம்பிரிட்ஜில உள்ள டிரினிட்டி கல்லூரியில் தன் இரண்டாம் BA படிப்பை முடித்தார். பின்னர் ஜெர்மனி சென்று, மூனிச் பல்கலைக்கழகத்தில் தத்துவ இயலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் 1908ல் லாஹூர் திரும்பி, வழக்கறிஞராகத் தன் பணியைத் தொடஙகினார். ஆனால், மறுபுறம் அரசியல், பொருளாதாரம், வரலாறு மற்றும் ஆன்மீகம் சார்ந்த பல அறிவார்ந்த படைப்புகளை எழுதிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எழுதிய அஸ்ராரே குதி - Asrar-e-Khudhi என்ற படைப்புக்காக மேலும் பிரபலமானார். அக்கவிதை நூல் வெளியீட்டுக்குப் பின் அவருக்கு நைட்ஹூட் (Knighthood) என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதே காலகட்டத்தில் ருமுஸ்-ஏ-பேகுதி (Rumuz-e-Bekhudhi), பங்-ஏ-தாரா Bang-e-Dhara ஆகிய நூல்களை வெளியிட்டார்.

இக்பால் அவர்கள் ஆன்மீகத்தை மறைபொருளாகக் கொண்ட கவிதைகள் படைப்பதில் ரூமியைத் தன் வழிகாட்டியாகக் கொண்டார். அவர் உலகம் முழுவதும் இஸ்லாமிய நாகரீகத்தின் அரசியல் மற்றும் ஆன்மீக மறுமலர்ச்சியின் ஆதரவாளராக இருந்தார். குறிப்பாகத் தெற்காசியாவில் ஆகப் பெரும் அடையாளமாக விளங்கினார். இது தொடர்பாக அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவுகள் இஸ்லாத்தில் ஆன்மீகச் சிந்தனையின் மறுசீரமைப்பு என்ற பெயரில் தொகுக்கப்பட்டு, நூலாக வெளியிடப்பட்டது.

இக்பால் அவர்கள் 1927ல் பஞ்சாப் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியில் பல பதவிகளை வகித்தார். 1930ல் அலஹாபாதில் நடைபெற்ற முஸ்லிம் லீக் ஆண்டுக் கூட்டத்தில் அவர் ஆற்றிய தலைமை உரை, அப்போதைய பிரிட்டிஷ்-இந்தியாவில் முஸ்லிம்களுக்கான தேவைகளைக் கருத்தில் கொண்டு, முஸ்லிம்களுக்கான அரசியல் கட்டமைப்பைப் பற்றியதாக இருந்தது.

அவர் 1938ல் மறைந்தார். 1947ல் பாகிஸ்தான் உருவான பின் அந்நாட்டின் தேசியக் கவிஞராக அறிவிக்கப்பட்டார்.

எனக்குப் பிடித்த அவர் கவிதை:

Dhuaa tho dhil se maang jaathi hai, zabaan se nahin! Ae Iqbal! Qabool tho is ki bhi naheen hothi hai!Jis ki zabaan naheen hothi

துஆ தோ தில் ஸே மாங் ஜாதி ஹை Zஜபான் ஸே நஹீன்! ஏ இக்பால்! கபூல் தோ இஸ்கி பிஹ் ஹோதி ஹை ஜிஸ் கி zஸபான் நஹீன் ஹை!

துஆ மனதால் கேட்கப்படுகிறது, நாவால் அல்ல; ஏ இக்பால்! இறைவன் ஊமையின் துஆவையும் ஏற்றுக் கொள்கிறான்!

அவர் உருது மொழிக்குச் சிறந்த பங்களிப்பை ஆற்றியதால், அவரது பிறந்தநாளான நவம்பர் 9 - உலக உருது நாள் எனக் கொண்டாடப்படுகிறது.