Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

இந்தியாவை ஆண்ட முதல்  இஸ்லாமிய பேரரசி
Nov 20 2022 காலக்கண்ணாடி

இந்தியாவை ஆண்ட முதல் இஸ்லாமிய பேரரசி

ரஸியா சுல்தானா!

கி.பி. 1236 - 1240 வரை டெல்லியை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.. இவர் இந்தியாவின் முதல் அரசி என்று அழைக்கப்படுகிறார். இவரது தந்தை பெயர் ஷம்ஸுத்தீன் அல்தமிஷ். இவர் டெல்லியை ஆண்ட மூன்றாவது சுல்தான் ஆவார். இவர் டெல்லியை கி.பி. 1211 முதல் 1236 வரை ஆட்சி செய்தார்.

ரஸியாவின் தந்தை ஷம்ஸுத்தீன் அல்தமிஷ்க்குப் பல மகள்களும், மகன்களும் இருந்தனர். ஆனால் இவர் ரஸியா பேகத்தையே மிக அதிகமாக நேசித்தார். ஒரு பெண் கற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தார்.

இவர் ஒரு இளவரசியாகவே வளர்க்கப்பட்டார். கூடவே அரசியல் விவகாரங்களையும் நன்கு கற்றறிந்தார்.

குதிரைச் சவாரியிலும், வாள் வீச்சிலும், வில் வித்தையிலும் தனது சகோதரர்களையும் விட மிகச் சிறந்து விளங்கினார்.

அச்சமயத்தில் ரஸியாவின் தந்தை ராஜபுத்திரர்களுக்கெதிராக படையெடுத்துச் சென்றார். தான் திரும்பி வரக் காலதாமதம் ஆகலாமெனக் கருதிய அவர் தனக்கு பதிலாக தனது மகள் ரஸியா பேகத்தை ஆட்சி அதிகாரத்தில் நியமித்தார்.

அல்தமிஷ் திரும்பி வர சுமார் ஆறு ஆண்டுகள் ஆனது. அக்காலக் கட்டத்தில் ரஸியா பேகம் நன்முறையில் விவேகத்துடன் ஆட்சிபுரிந்தார்.தனது தந்தை திரும்பி வந்ததும் ரஸியா பேகம் ஆட்சியை தந்தையிடமே ஒப்படைத்தார்.

கி.பி.1236ஆம் ஆண்டு ரஸியாவின் தந்தை ஷம்ஸுத்தீன் அல்தமிஷ் மரணமடைந்தார். ஏற்கனவே அவர் தனது வாரிசாக ரஸியா பேகத்தையே முடிவு செய்திருந்தார்.

ஆனால், அவரது மகன்களுள் ஒருவரான ருகுனுத்தீன் ஃபெரோஸ் ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் மிக மோசமான ஆட்சியின் மூலம் ஆறே மாதங்களில் மக்களிடம் செல்வாக்கை இழந்தார். பின் ரஸியா பேகம் ஆட்சிப் பொறுப்பேற்று மக்கள் மத்தியில் தன் தந்தைக்கு நிகரான செல்வாக்கைப் பெற்றார். எனவே, இவர் இந்தியாவின் முதல் மக்களரசி என்று அழைக்கப்படுகிறார்.