மஞ்சளின் மகிமை!
மஞ்சளில் உள்ள அனைத்தும் குர்குமின் எனும் மூலப்பொருளில் அடங்கியுள்ளது. துரதிர்ஷ்டவசமாக சமைக்கையில் மஞ்சளின் ஜீவநாடியான குர்க்குமின் அழிந்துவிடுகிறது. அதனால் சமைத்து முடித்தபின் மஞ்சளை மேலே பொடியாகத் தூவி பரிமாறினால் கீழ்க்காணும் நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.
குர்குமின் 70 வகையான வியாதிகளைக் குணமாக்குவதாக ஒன்றல்ல, இரண்டல்ல ஆயிரக்கணக்கான ஆய்வுகள் கூறுகின்றன. அத்தனையையும் பட்டியலிட ஆயுள் போதாது. சுருக்கமாகச் சொன்னால் மஞ்சளால் காக்கப்படாத உடலுறுப்பே கிடையாது எனலாம்.
குர்குமின் அற்புதமான வலி நிவாரணி. ஆய்வொன்றில் ஆங்கில மருந்தான செலெப்ரக்ஸ், 'இன்ஃப்லமேஷன்' எனும் உள்காயங்களை எந்த அளவு ஆற்றுகிறதோ, அதை விட விரைவாக குர்குமின் உள்காயங்களை ஆற்றுவதாக கண்டுபிடித்துள்லார்கள். மார்பகப் புற்றுநோயை தடுக்கவல்லது டமோஃபோக்ஸின் எனும் மருந்து. ஆனால் ஆய்வொன்றில் அதை விட அதிகச் செயல்திறனுடன் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கவல்லது குர்குமின் எனக் கண்டுபிடித்துள்ளார்கள்.
"ஆயுள் முழுக்க ஒரே ஒரு மூலிகையைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும்; வேறு எதையும் சாப்பிடக்கூடாது என்றால் நான் மஞ்சளைத் தேர்ந்தெடுப்பேன்" என்கிறார் மருத்துவர் டேடிவ் ப்ராவ்லி.
மஞ்சள்:
புற்றுநோயை உருவாக்கும் ஜீன்கள் தீவிரமாக இயங்காமல் தடுக்கிறது
புற்றுநோய்க் கட்டியாக மாறிய செல்கள் பரவும் வேகத்தைத் தணிக்கிறது'
சாதாரண செல், புற்றுநோய் செல் ஆவதை மட்டுப்படுத்தித் தடுக்கிறது
புற்றுநோய் செல்லாக மாறி, செயலிழந்தச் செல்களைக் கொல்கிறது
புற்றுநோய்க் கட்டி உள்ளுறுப்புகளுக்குப் பரவாமல் தடுக்கிறது
புற்றுநோய் பாதித்த செல்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைத் தடுத்து அவற்றைச் செயலிழக்க வைக்கிறது
கீமோதெரபி செய்பவர்களுக்கு அதன் விளைவு பலமடங்கு அதிகரிக்கிறது
மஞ்சள் 22 வகை புற்றுநோய் வகைகளை எதிர்த்துப் போரிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சில: மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கலோன் புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோய்
இதுபோக மருத்துவமே குணப்படுத்தத் திணறும் மூளைப் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய், ஈரல் புற்றுநோய், கணையப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், மெலனாமா எனும் தோல் புற்றுநோய் முதலானவற்றைக் கூட மஞ்சள் குணமாக்கும் மருந்தாகப் பயன்படுகிறது
ஆய்வொன்றில் மார்பகப் புற்றுநோய் வந்தவர்களுக்கு டாக்சால் எனும் மருந்தைக் கொடுத்து வந்தார்கள். அத்துடன் குர்குமின் சேர்த்தபோது அந்த மருந்தின் வீரியம் பல மடங்கு அதிகரித்ததுடன், அதன் பின்விளைவுகளையும் மஞ்சள் மட்டுப்படுத்தியது
மெனோபாஸ் ஜர்னல் இதழில் வெளியான ஆய்வொன்றில் மார்பகப் புற்றுநோய் வந்த பெண்கள் எஸ்ட்ரோஜன் சப்ளிமெண்ட்டுடன் மஞ்சளை சேர்த்துக்கொள்ளும்போது மருந்தின் வீரியம் பலமடங்கு அதிகரிப்பதாகக் கண்டுபிடித்தார்கள்.
கலோன் புற்றுநோய்:
பெருங்குடலில் பாலியாப்ஸ் எனும் சிறுகட்டிகள் உருவாவது கலோன் புற்றுநோய் வருவதற்கான காரணம். ஆய்வொன்றில் குவெர்செடின் எனும் மருந்து 20 மிகிராம் உடன், 480 மிகி குர்குமினை உட்கொள்வது பாலியாப்ஸ் வருவதை தடுப்பதாக கண்டறிந்துள்ளார்கள். குவெர்சடின் என்றால் என்னவோ ஏதோ என நினைத்துவிடவேண்டாம். அதன் மூலப்பொருள் சாட்சாத் நம் வெங்காயமேதான்!
பச்சை வெங்காயம் + சமைக்காத மஞ்சள் = கலோன் புற்றுநோய்க்கு மருந்து
கருப்பைப் புற்றுநோய்:
கருப்பைப் புற்றுநோய் வரக் காரணம் பாபில்லோமா வைரஸ். அதை அழிக்கும் சக்தி கொண்டது குர்குமின்.
நுரையீரல் புற்றுநோய்:
புகைபிடிக்கும் பழக்கம் உள்ள 16 பேர் தினம் 1500 மிகி கியுர்க்யுமின் உட்கொண்டார்கள். 30 நாட்கள் கழித்து, அவர்களின் சிறுநீரை ஆராய்ந்ததில் புகைபிடித்ததால் உடலில் எத்தனை புகையிலை சம்பந்தப்பட்ட விஷங்கள் உடலில் சேர்ந்தனவோ, அதை விட அதிகக் கழிவுகளை அவர்கள் உடல் வெளியேற்றியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குர்குமின் உட்கொள்ளாத புகைபிடிப்பவர்களால் உடலில் இத்தகைய மாற்றம் எதுவும் நிகழவில்லை.