Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

பூண்டின் நன்மைகள்
Nov 27 2022 வாழ்வியல்

பூண்டின் நன்மைகள்

பூண்டு:

பூண்டைப் பற்றி 3200 பதிப்பிக்கபட்ட மருத்துவ ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சுருக்கமாக அவை சொல்லும் செய்தி "உலகில் எல்லாரும் தினம் 1 அல்லது 2 பூண்டுகள் சாப்பிட்டால் மாரடைப்பு மரணங்கள் 25% குறையும்" என்பதுதான். ஸ்டாடின் சாப்பிட்டால் 1% கூட மாரடைப்பு மரணம் வராது. ஆனால் சமைத்த பூண்டில் பலன் இல்லை. பச்சையாக அல்லது பொடியாக சாப்பிட்டால்தான் பலன். மஞ்சளின் மகிமை குர்குமினில் உள்ளதுபோல் பூண்டின் மகிமை அதிலுள்ள அலிசினில் உள்ளது.

பூண்டு ரத்த அழுத்தத்தை 10 புள்ளிகள வரை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்ரன. டயஸ்டாலிக், சிஸ்டாலிக் இரண்டு வித ரத்த அழுத்தங்களையும் பூண்டு குறைக்கிறது

பூண்டு டி.என்.ஏ ஆக்சைடைசேஷனால் பாதிப்படைவதைத் தடுக்கிறது

ஆஸ்பிரின் நம் ரத்தத்தை மெலியச் செய்கிறது. இது ரத்தம் கட்டியாகி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது. இதைச் செய்யகூடிய சக்தி படைத்தது பூண்டு.

பூண்டு ட்ரைகிளிசரைடு மற்றும் மொத்த கொலஸ்டிரால் இரண்டையும் குறைக்கும். எல்டிஎல், எச்டிஎல்லை குறைப்பதில்லை.

இதயத்தில் உருவாகும் மாரடைப்புக்கு நிவாரணம்: ஆய்வொன்றில் பூண்டு சாப்பிட்டவர்களுக்கு சாப்பிடாதவர்களை விட மாரடைப்பு உருவாவது மும்மடங்கு குறைவு எனக் கண்டுபிடித்தார்கள்.

இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் என்டொதெலியம் எனும் நரம்புகளின் லைனிங்கை பூண்டு விரிவாக்குகிறது. இதனால் இதயத்துக்கு செல்லும் ரத்த ஓட்ட அளவு அதிகரிக்கும்.

ரஷ்யாவில் நிகழ்ந்த ஆய்வொன்றில் பூண்டு மாரடைப்பை 40% குறைத்ததைக் கண்டுபிடித்தனர்.

பூண்டின் புற்றுநோய் எதிர்ப்புத் தன்மையைப் பற்றி 600 ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன,

பூண்டு சாப்பிட்டவர்களுக்கு கலோன் புற்றுநோய் வருவது 41% குறைகிறது. வயிற்றுப் புற்றுநோய் வருவதைப்பூண்டு 47% குறைக்கிறது. நுரையீரல் புற்றுநோய் வருவதை 22% தடுக்கிறது. மூளைப் புற்றுநோய் வருவதை 34% தடுக்கிறது

விமான பயணத்தில் வரும் கிருமித் தொற்றைத் தடுக்க பூண்டு உள்ள ஸ்ப்ரே பயன்படுத்தபடுகிறது. குளிர்காலத்தில் பூண்டு சாப்பிட்டால் சளிபிடிப்பது பாதியாகக் குறையும்.

ஆய்வொன்றில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு தினம் ஒரு பூண்டு கொடுக்கப்பட்டதில் சராசரியாக 138 ஆக இருந்த சர்க்கரையின் அளவு ஒரு மாதத்தில் 113 ஆகக் குறைந்தது. பூண்டுத் தோலுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்துத் தோலை இளமையாக வைக்கிறது

இத்தனை நன்மையும் கிடைக்க சாப்பிடவேண்டியது தினம் ஒரே ஒரு பூண்டு மட்டுமே. ஆனால் பச்சையாக சாப்பிட வேண்டும்.