Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அய்மான் சங்க வரவேற்பு நிகழ்ச்சி
Dec 04 2022 அண்மைச் செய்திகள்

அய்மான் சங்க வரவேற்பு நிகழ்ச்சி

அய்மான் சங்கத்தின் வரவேற்பு நிகழ்ச்சி!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை புரிந்துள்ள திருச்சி ஜமால்முஹம்மது கல்லூரியின் ஓய்வுபெற்ற துணைமுதல்வர் பேராசிரியர் P.N.P முஹம்மது சகாபுதீன் அவர்களை அய்மான் சங்கத்தின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 01-12-2022 வியாழக்கிழமை மாலை 3.30 மணி அளவில் அய்மான் சங்க துணைத்தலைவர் ஆவை A.S முஹம்மது அன்சாரி அவர்கள் இல்லத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H.M முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமையேற்றார்கள்.

இந்நிகழ்ச்சியை ஆடுதுறை இமாம் E. ஷாஹுல் ஹமீது தாவூதி அவர்கள் இறைவசனம் ஓதி துவங்கி வைத்தார்கள்

அதனைத் தொடர்ந்து கடந்த 42 வருடங்களாக அய்மான் சங்கம் செய்து வரும் நற்பணிகளை சங்கத்தின் பொருளாளர் A. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி மற்றும் நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முகம்மது அப்துல் காதர் அவர்களும் பேராசிரியர் அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

நிகழ்ச்சியில் பேராசிரியர் P. N. P. முஹம்மது சகாபுதீன் அவர்களுடன் கலந்துரையாடலுக்குப் பிறகு அவர்களுக்கு அய்மான் சங்கத்தின் சார்பாக பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜமால்முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் Etisalat நவசாத் அலி , நாகூர் அமீர் அலி மற்றும் அய்மான் சங்கத்தின் துணைத்தலைவர் மதுக்கூர் ஒய்.எம் அப்துல்லா, பைத்துல்மால் பொதுச்செயலாளர் பார்த்திபனூர் நிஜாம்மைதீன், துணைப்பொருளாளர் பசுபதிகோயில் சாதிக்பாட்சா, சங்க உறுப்பினர்கள் M. முஹம்மது யாசிர், M. முஹம்மது அஸ்பர், லெப்பை தம்பி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் ஆவை A. S.முஹம்மது அன்சாரி அவர்கள் நன்றியுரை வழங்க லால்பேட்டை மௌலவி ரஷீத் அஹமது ஜமாலி துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

அய்மான் சங்கம், அபுதாபி

Related News