சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் மீண்டும் ஒரு சாதனை
இரத்தக்குழாய் பாதிப்பில் அழுகிய கால்களால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியின் கால்களை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றி உயிரை காப்பாற்றி எடப்பாடி அரசு மருத்துவர்கள் சாதனை..
சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் வேணுகோபால் தனது வலது காலில் இரத்தக்குழாய் பாதிப்பு ஏற்பட்டு கால்கள் அழுகிய நிலையில் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனையில் எலும்பு அறுவை சிகிச்சை , மூட்டுமாற்று மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் இமாம் Ms Orthoவிடம் ஆலோசனை பெற்றார்..
அவரை சோதனை செய்து பார்த்ததில் அவருடைய வலது காலில் இரத்தக்குழாய் பாதிப்பால் கால்கள் அழுகி உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பது கண்டுபிடிக்கபட்டது.
உடனே மருத்துவ அலுவலர் Dr செந்தில்குமாரிடம் அனுமதி பெற்று Dr இமாம் Ms Ortho தலைமையிலான மருத்துவ குழுவினர் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டின் கீழ் வலது காலில் ஏகே ஆம்புடேசன் எனும் பாதிக்கப்பட்ட முட்டிக்கு மேல் அறுவை சிகிச்சை செய்து அழுகிய பகுதியை அகற்றி சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து நோயாளியின் உயிரை காப்பாற்றினர்.
இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மருத்துவ அலுவலர் Dr செந்தில் குமார், மயக்கமருந்து சிகிச்சை நிபுணர் Dr ஸ்வப்னா மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்
இதற்கு முன்பாகவே Dr இமாம் MsOrtho தலைமையிலான மருத்துவ குழு எடப்பாடி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக ஏழை கூலித்தொழிலாளிக்கு மாண்பு மிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டின் கீழ் முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்ததும் , பெண் கூலித்தொழிலாளி ஒருவருக்கு எலும்பில் புற்றுநோய் கட்டியை அகற்றி சாதனை புரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது..
தனியார் மருத்துவனைகளில் சில லட்சங்கள் வரை செலவாகும் இது போன்ற அறுவை சிகிச்சைகளை தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏழை எளிய மக்கள் இலவசமாக செய்து பயன் பெறுவது தமிழக சுகாதாரத்து துறையின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு சிறந்த உதாரணம்...