பில்கிஸ் பானு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் பற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி
எந்தவொரு அடிப்படையில் தண்டனை காலம் முடிவுக்கு முன்னரே பில்கீஸ் பானு வன்புணர்வு வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடிவு செய்தீர்கள் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் 2002-ல் மோடி முதலமைச்சராக இருந்தபோது ஏற்பட்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், அதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று பொய்குற்றச்சாட்டின் அடிப்படையில்
இஸ்லாமியர்களின் மீது பெரும் தாக்குதலை அரசின் துணையோடு ஆர்எஸ்எஸ் நடத்தியது இந்தச் சம்பவத்தின்போது, ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற இஸ்லாமியப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். ஒரு பெண் பல பேர்களால் கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.அதன் பின் 11பேர் மீது குற்றம் நிரூபிக்க பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
14 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்துவந்த அந்த 11 ஆயுள் தண்டனைக் குற்றவாளிகளை, கடந்த 2022-ம்ஆண்டு சுதந்திர தினத்தில் குஜராத் அரசு விடுதலை செய்தது.இந்த 11 பேரும் பிராமணர்கள்,சமூக அந்தஸ்துடையவர்கள் என்றெல்லாம் காரணம் கூறி இவர்களை விடுதலை செய்ததோடு இந்தக் குற்றவாளிகளை மாலை அணிவித்து, இனிப்புகளுடன் கொண்டாடி வரவேற்ற அவலமும் அரங்கேறியது.
இந்நிலையில் இவர்கள் விடுதலையை எதிர்த்து பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்ட்டது.அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் (17.8.23) விசாரணைக்கு வந்த போது மேற்சொன்ன அதிரடி கேள்விகளை கேட்டுள்ளது.
இதற்கு பதில் தந்த பாஜக அரசின் வழக்கறிஞர் அவர்கள் திருந்தி விட்டதாக நாங்கள் உணர்ந்தோம்.1992 ம் ஆண்டில் திருத்தப்பட்ட புதிய பாலிசி அடிப்படையில் அவர்களை நாங்கள் முன்னரே விடுதலை செய்ய தீர்மானித்தாக வாதாடினார். நீதிபதி நாக ரத்னா குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும் நீங்கள் எந்த அடிப்படையில் இது போன்ற முடிவை எடுக்க முடியும்? ஏனைய கைதிகள் சிறைச்சாலையில் இருந்து வரும் நிலையில் இவர்களுக்கு மட்டும் எந்தவொரு அடிப்படையில் இது போன்ற விஷேட முன்னுரிமை தர முடிவு செய்தீர்கள் என்று மிகவும் கடுமையான கேள்விகளை முன்வைத்த நிலையில் குஜராத் பாஜக அரசின் வழக்கறிஞர் திணறும் சூழல் ஏற்பட்டது.
ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் 13 பேரை கொடூரமாக படுகொலை செய்த 11 பேரின் விடுதலை நாட்டின் அமைதிக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகும்.அதே போல் உச்ச நீதிமன்றம் இக்கேள்விகளோடு நிறுத்தி விடாமல் விஷேச முன்னுரிமையில் வெளி வந்த குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைத்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே நீதியை எதிர்பார்த்து நிற்கும்
ஒவ்வொருவரின் நிலையும் அதுவே,
.உச்சநீதிமன்றம் வழங்கும் நியாயமா தீர்ப்பே பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை.நீதி நிலைநாட்டப்படுமா?