கைபேசி திருட்டு மலேசியா காவல் துறையின் துரித நடவடிக்கை!
லபுவான் 21/10/2023
மளிகை கடையில் திருடப்பட்ட கைபேசி சில மணிதியாலங்களில் மலேசியா காவல் துறையினால் மீட்கப்பட்டது.
லபுவான் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இந்திய வம்சாவளி சேர்த்த பிரசித்தம்பெற்ற மளிகை கடையில் காலை 10:30 am அளவில் பரபரப்பாக வணிகம் நடந்த வேளையில் அடையாளம் தெரியாத ஒரு ஆசாமி கடையில் கல்லா பெட்டி அருகில் இருந்த கைபேசியை திருடி சென்றான் அதன் பிறகு கடையில் உரிமையாளர் சிசிடிவியை பார்வையிட்டார். கைபேசி திருடப்பட்டது தெரிந்தது உடனே காவல்துறையை அணுகி உதவி கேட்டார்.
லபுவான் எல்லைக்குட்பட்ட காவல் துறை வலையமைப்பு செயலி உதவியுடன் அந்த கைபேசி எடுத்தவரை கைது செய்தது. இந்த நடவடிக்கையால் காவல்துறையினரை அனைவரும் பாராட்டினர்.