Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

சென்னை மாநகராட்சியில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100% உயர்ந்துள்ளது.
K.Prabakaran Nov 02 2023 செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டணம் 100% உயர்ந்துள்ளது.

  • சென்னையில் கட்டட அனுமதிக்காக கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எப்எஸ்ஐ எனப்படக்கூடிய தரை பரப்பு குறியீட்டின் அடிப்படையில் 100 சதுர மீட்டருக்கு வீடு கட்டினால் முதல் 40 சதுர மீட்டருக்கு 90 ரூபாய் என்ற கட்டணம் 180 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 41 முதல் 100 சதுர மீட்டர் வரையுள்ள கட்டணமானது 155ஆக ஏற்கனவே வசூலிக்கப்பட்டது. வரும் 10ம் தேதி முதல் இது 300 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • அதுமட்டுமின்றி வீடு, கல்வி நிறுவனங்கள், வணிகம் மற்றும் தொழிற்சாலைக்கான தரை பரப்பு குறியீட்டில் 100 சதுர மீட்டருக்கு மேல் கட்டக்கூடிய கட்டிடங்களுக்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு மற்றும் கல்வி கட்டணங்களை பொறுத்தவரை 90 ரூபாய்க்கு வைக்கப்பட்ட கட்டணமானது 180 ரூபாய்க்கும், 155 அனுமதிக் கட்டணமானது 300 ரூபாய்க்கும், 1000 ரூபாய்க்கு விதிக்கப்பட்ட கட்டணமானது 2000 ரூபாய்க்கும் என இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மேலும் கிணறு, குடிநீர் தொட்டி, சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணம் இரு மடங்காக உயர்ந்துள்ளது. பழைய கட்டடங்களை இடிப்பதற்கு அனுமதி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த புதிய கட்டண உயர்வு வருகின்ற 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News