Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

வணிக நிறுவனங்களில் கூடுதல் விலைக்கு விற்றால் அபராதம்.
குளச்சல்-எஸ்.நுஜுமுத்தீன் Nov 04 2023 தமிழக செய்திகள்

வணிக நிறுவனங்களில் கூடுதல் விலைக்கு விற்றால் அபராதம்.

கடைகள் மற்றும் நிறுவனங்களில் 

கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்றால் அபராதம்.

தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை.


நாகர்கோவில்,நவ.4-


நாகர்கோவில்(அமலாக்கம்)தொழிலாளர் உதவி ஆணையர் ஜெ.மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.


சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையரால் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 2009 ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011ம் ஆண்டு (பொட்டல் பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதால் என் தலைமையில் (மணிகண்ட பிரபு) தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் டெக்ஸ்டைல்,ஆயத்த ஆடைகள், இனிப்பு விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


மேலும் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் இரண்டு விலைகள் குறித்து சட்டமுறை எடையளவு விதிகளின் கீழ் ஆய்வுகள் மேற்க்கொள்ளப்பட்டது.


முத்திரையிடப்படாத,தரவு படுத்தப்படாத எடை அளவுகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் எனவும், பொட்டல் பொருட்களின் விதிகளின் கீழ் அதிகபட்ச சில்லறை விற்பனையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல்,உரிய அறிவிப்புகள் இல்லாமல் இருப்பது மற்றும் பொட்டலம் இடுபவர், இறக்குமதியாளர் பதிவு சான்று பெறாதது, ஆகிய குற்றங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5000 முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Related News