Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு
நிருபர்: மு.முகம்மது உதுமான் யாசீர் Nov 07 2023 அண்மைச் செய்திகள்

அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு

சென்னை, நவ-07, 2023,

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழைப் பெய்து வருகின்றது. இதனையொட்டி, வரும் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. வரும் நாட்களிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் 

பா.செந்தாமரைகண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடதமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 10-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும், 11-ம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி,திண்டுக்கல், மதுரை ,விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும்,வரும் 8-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 13 செ.மீ., தேனி மாவட்டம் வீரபாண்டி, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 11 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

Related News