மத ஓற்றுமைக்கு ஓர் வரலாற்று உண்மை.
திருமுருகன் குடிகொண்டிருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். இக்கோவிலுக்கும் காயல் பட்டணத்துக் நெருங்கிய
தொடர்பு உண்டு.
விஜய நகர மன்னர்கள் தென் தமிழ்நாட்டில் சுமார் இருநூறு ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
அம்மன்னர்களின் பிரதி-நிதிகளாக நாயக்க மன்னர்கள் கி.பி. 1529 முதல் 1736 வரை தென்பாண்டிய நாட்டினை நிர்வகித்தனர்.
போர்த்துக்கீசியர் தமிழ் நாட்டில் வியாபாரத் திற்காக கடற்கரை நெடுகிலும் கொத்த ளங்களை நிறுவினர் அவர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள் வியாபார நிமித்தமாக வந்தனர். இரு நாட்டவரும் கிறிஸ்தவர்கள் என்றாலும் வியாபாரப் போட்டியோடு இருவரும் கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ் டான்டெனும் இரு பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.
கி.பி.1645-ம்ஆண்டு டச்சுக் காரர்கள் காயல்பட்டினத்தில் வியா பாரக் கிடங்குகளை அமைத்தனர்.போர்த்துக் கீசியர் தூண்டுதலால் நாயக்க மன்னர் டச்சுக்காரர்களை இலங்கைக்கு விரட்டினர்.
கி.பி.1649-ம் ஆண்டு 436 டச்சுக்காரர்கள் 180 சிங்களர் களோடு மணப்பாட்டில் எதிரில் வந்தனர். அங்கிருந்து வீரபாண்டிய பட்டணத் துக்கும்,திருச்செந்தூருக்குமிடையே இறங்கினர். நாயக்கர் மன்னர் சார்பாக காயல்பட்டினம் பிரமுகர் வந்து இக்கோயிலை விட்டு டச்சுப்படை காலி செய்ய வேண்டினர். அவர்கள் மறுக்கவே ஊரில் உள்ள மக்களும் நாயக்கர் பட்டாளமும் டச்சுக்காரர் களோடு சண்டையிட இதில் 300 பேர் இறந்தனர்.
நாயக்கர் மன்னர் நஷ்ட ஈடு தந்தால் மூல விக்ரகம் உட்பட கோயிலில் உள்ள மற்ற விக்ரகங்களை தருவதாகவும் இல்லா விடில் நஷ்ட ஈட்டிற்கு பணமாக இலங்கைக்கு எடுத்துச்செல் வதாக சொல்லிக் கொண்டு சென்றனர். இதனால் திருச் செந்தூரில் 1649-ம் ஆண்டு முதல் 1651-ம் ஆண்டு வரை இக்கோயிலில் நாள் வழிபாடும், திருவிழாவும் நடை பெறவில்லை.
கி.பி.1650-ம் ஆண்டு வட மலையப்ப பிள்ளையன் டச்சுக்காரர்களிடமிருந்து விக்ரகங்களை திரும்ப பெற காயல் நகரத்து நான்கு பிரமுகர்களை இலங்கையில் உள்ள டச்சசுக்கார்களிடம்அனுப்ப காயல் நகர அதிகாரிகளை வேண்டினர்.
காயல் நகர பிரமுகர்கள் முயற்சியால் கி.பி.1651-ம் ஆண்டு டச்சுக்காரர்கள் விக்ரகங்களை காயல் நகருக்கு அனுப்பினர்.
அவை திருச்செந்தூரில் ஒப்படைக்கப்பட்ட பின் கி.பி.1653-ம் ஆண்டு கும்பா பிஷேகம் நடத்தப்பட்டது.திருச்செந்தூர் கோயிலின் மேலக்கோபுரம் நாயக்கர் மன்னர்களால் கட்டப் பட்டது.
திருவாவடுதுறை ஆதீனம் தேசீக மூர்த்தி சுவாமிகள் ஒடுக்கத்த தம்புரான் கனவில் முருகன் தோன்றி திருப்பணிக்கு அழைத்தார் என்றும்,அவர் பணி செய்யும் போது கோபுரத்தில் ஆறாம் நிலை வந்த போது கட்ட காசில்லாமல் திண்டா டினார் என்றும், முருகன் கனவில் தோன்றி காயல்பட்டினத்தில் அப்
பொழுது வாழ்ந்த வள்ளல் சீதக்காதியை உதவி கேட்க வேண்டி வள்ளல் சீதக்காதி ஒரு மூடை தங்கக் காசு கொடுத்ததாகவும்,அதைக் கொண்டு திருப்பணி பூர்த்தி அடைந்தது.
இந்த நிகழ்ச்சி மத ஒற்றமைக்கும் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கும் என்றும் அழியாத சான்றாகும்.
ஆதாரம்:
டாக்டர்.கல்யாண சுந்தரம்
(திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு).
திருமிகு.க.அ.நீலகண்ட சாஸ்திரி அவர்களின் (கலைமகள் கட்டுரை).
நூல்: காயல்பட்டணம் தேர்வு நிலை பேரூராட்சி நூற்றாண்டு மலர்.
தகவல் தொகுப்பு:-
குளச்சல் இஸ்லாமிய இளைஞர் முன்னேற்ற சங்க வெள்ளி விழா மலர்.