தமிழ்நாடு இது பெரியாரின் வீடு என்று சொல்லுண்டு.இவரின் பெயரை கேட்டாலே பாஜகவிற்க்கு வயிற்று எரிச்சலை உண்டு பண்ணுகிறது.இந்தியாவில் சனாதன குறித்த சர்ச்சைகள் புதிய அவதாரம் எடுத்துள்ளது எனலாம்.இவற்றை சாதாரண மனிதன் பேசுவதை விட இது குறித்து தொடர்ந்து ஆட்சியாளர்களும், அதிகார மட்டதில் உள்ளவர்கள் தான் அதிகம் விவாதிக்கின்றனர்.
பிறப்பின் அடிப்படையில் மனிதனை உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என சனாதனத்தில் பிரித்து சொல்லபடுவதும்.உயர் ஜாதியினர்களுக்கு இட ஒதுக்கீடு,ஜாதிவாரி கணக்கெடுப்பு என இவைகள் எல்லாம் இந்தியாவில் தீண்டாமை ஒரு பாவ செயல் என்ற பாட புத்தகத்தின் வரிகளை ஒரு போதும் சனாதனம் ஓழித்துவிட அனுமதிக்காது.
மனிதனை உயர்வு,தாழ்வுகளை தூக்கி பிடிப்பவர்கள் இவற்றில் ஆர்வம் கொள்வதில் ஆச்சிரியப்பட அவசிமில்லை!இன்று பதவிகள் மற்றும் அதிகார சுகத்தை தக்கவைத்து கொள்ள பெரிதும் இவை வழு சேர்க்கிறது.
இந்தியாவில் பெரியாரை முன்னோடியாக கொண்டு தமிழத்தில் உள்ள தலைவர்கள் போன்று பகுத்தறிவுக்கு பாடம் நடத்தியவர்கள் நாட்டில் வேறு எந்த மாநிலத்திலையும் இவற்றை காணமுடியாது.இதனால் தான் தமிழ்நாடு பகுத்தறிவு பூமியாக விளங்குகிறது.
அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சனாதன குறித்த நிலைபாடும்.பாஜக தலைவர்கள் சனாதன குறித்த நிலைபாடும் எதிர் எதிர் திசையில் பயணிக்கின்றன.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சனாதன குறித்த நிலைபாட்டுக்கு உயர்நீதிமன்றம் கூட அமைச்சர் என்பதால் காவல்துறையின் நடவடிக்கை இல்லாமல் போனதாகவும்.இதற்கு பதில் அளித்த உதயநிதிஸ்டாலின் அவர்கள் அமைச்சர் என்பதை விட மனிதன் என்ற நிலையில் தன் கருத்து சரியானது எனவும் தெரிவித்துள்ளார்கள்.
இது தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
21 ஆம் நூற்றாண்டில் நவீன தொழில்நுட்பத்தில் முன்னேறி இருப்பதை காட்டிலும் இன்னும் மனிதன் சம உரிமை பெறுவதில் முன்னேற்றம் அடையவில்லை என்பது தெளிவாகிறது.இந்த விவாகரம் தற்போது இந்தியாவில் அரசியல் சூறாவளியை உருவாக்கிவுள்ளது குறிப்பிடத்தக்கது.