Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

என்று சீராகும் இந்த அவலங்கள்
அபூ ஹலீமா Nov 13 2023 நாடும் நடப்பும்

என்று சீராகும் இந்த அவலங்கள்

என்று சரியாகும் இந்த நிலைமைகள்

10-11-2023 வெள்ளிக்கிழமையன்று திடீர் பயணம் சென்னை முதல் திருநெல்வேலி வரை.

ஏசி இல்லாமல் படுக்கை வசதி கொண்ட பேருந்து. டிக்கெட் விலை ரொம்ப அதிகம் இல்லை,கம்மிதான் 2000 ரூபாய்.வண்டி கிளம்ப ஆரம்பிக்கும் முன்பே ஒரு ஏழு எட்டு கேமராக்களோடு குபுகுபுவன ஒரு அமைச்சர் போலீஸ்காரர்களோடு உள்ளே நுழைந்தார். எனக்கு அருகில் இருந்த ஒரு குடும்பத் தலைவர் இடத்தில் டிக்கெட்டுடைய விலை என்னவென்று கேட்டார்,எங்கே செல்கிறீர்கள் என்று விசாரித்தார் அவர் 1500 ரூபாய் என்று சொன்னார். இதெல்லாம் கேமராவில் பதிவானதாக தெரியவில்லை. உள்ளே வரை சென்று இன்னும் சிலரிடம் கேட்டுவிட்டு சென்றுவிட்டார். 

அமைச்சர் சென்றவுடன் அந்த குடும்பத் தலைவரிடம் கேட்டேன்,  டிக்கட் உண்மையில் 1500ரூபாயா ? இல்லை 2000 என்றார். அப்ப ஏன் கம்மியா சொன்னீங்க அப்படி சொல்ல சொன்னாங்களா?என்று கேட்டேன். 

இவ்வளவு கேமரா இருக்கு, பத்திரிக்கையில் வந்தாலும் வரும்,என்னுடன் என் சின்ன பசங்கல்லாம் இருக்காங்க, எதுவும் பிரச்சனை வந்திடக் கூடாது இல்ல..அதான் அப்படி சொன்னேன் என்றார். 

இப்படி எல்லாம் பயப்பட வேண்டியுள்ளதே என்று நினைத்துக் கொண்டேன். 

எல்லாமே ஒரு கண் துடைப்பு தான். ரெட்பஸ் போன்ற தளங்களில் தீபாவளி போன்ற சீசனுடைய காலங்களில் டிக்கெட் உடைய விலை எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று போய் பார்த்துக் கொள்ள முடியும் .ஆனாலும் கண் துடைப்பிற்காக இதுபோன்று அமைச்சர் கேட்டு விட்டு போகிறார். என்று மாறும் இந்த நிலை.தெரியவில்லை.


சரி 2000 ரூபாய் கொடுத்து பஸ்ஸில் செல்கிறோம், சுய தேவைகளுக்காக நல்ல இடத்தில் நிறுத்துவார்கள் என்று நினைத்தால், அவர்கள் நிறுத்திய எந்த இடத்திலும் கழிவறை நன்றாக இல்லை,சுத்தமாக இல்லை. கழிவறை இருந்தால் உள்ளே கதவில்லை,கதவிருந்தால் உள்ளே ஜக்கு பக்கெட் இல்லை,அதுவும் இருந்தால் பைப்பே இல்லை,பைப் இருந்தாலும் தண்ணீர் வருவதில்லை.


சில இடங்களில் கதவு இருக்கிறது, ஆனால் உடைந்திருக்கிறது.உள்ளே லாக் இல்லை.இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் .

குறிப்பாக பெண்கள் படும்பாடு சொல்லி முடிக்க முடியாது. நீண்ட காலமாக இந்த சிரமம் உள்ளது.என்று சரியாகும் என்று தெரியவில்லை.

சுய தேவைகளை நிறைவேற்றுவது மனிதனுடைய அடிப்படைத் தேவை?  மாநிலம் முழுக்க இல்லை, நாடு முழுக்க சாலையோரங்களில் சுத்தமான கழிவறைகள் ஏற்படுத்துவதும் மக்கள் கூடும் இடங்களில் வசதியான கழிவறைகள் அமைப்பதும் ஒரு நேர்மையான அரசின் கடமை. நிறைய வெளிநாடுகளில் இருப்பவர்கள் 'இலவச சுத்தமான கழிப்பறைகள் எங்களுக்கு எல்லா இடங்களிலும் உண்டு' என சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம். 5 ரூபா கொடு, பத்து ரூபா கொடு என்று கேட்கக் கூடிய நபர்களும் அங்கு  கிடையாதாம்.சரி இங்கு பணம் வாங்கும் இடத்திலாவது சுத்தம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இதை யாரிடத்தில் போய் சொல்வது, காலம் காலமாக இப்படியேதான் இருக்கிறது.என்று தீரும் இந்த பிரச்சனை தெரியவில்லை. இலவசங்களை ஒழித்து விட்டு அந்த பணத்தில் மக்களின் அடிப்படைத் தேவைக்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் அரசே.

Related News