மத்தியபிரதேசத்தில் கடந்த செவ்வாய்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ராகுல் காந்தியை முட்டாள்களின் தலைவர் என்றும்,காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்ச்சித்தார்.
இந்தநிலையில் பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலமான ராஜஸ்தானில் கோட்ட நகரில் காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஸ். பிரதமரின் விமர்ச்சனத்துக்கு
இந்தியாவில் இதுவரையும் யாரும் பார்த்திடாத பொய்களின் கட்சி என்றும்,பொய் புரட்டின் முகம் எனவும்,பொய்களின் உலக தலைவர் பிரதமர் மோடி என்றும் காங்கிரஸுக்கு எதிராக பொய்களை பரப்புவதே இவரின் பிரதான வேலை என்பதாக பிரதமர் மோடியையும்,பிஜேபி கட்சியை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
அமலாக்கத்துறை,சிபிஐ,நாட்டுமக்களை பிளவு படுத்துவது,பொய்களை அள்ளிவிடுவது அகிய மூன்றும் தான் பிஜேபியின் ஆயுதங்கள்.
ஆனால் ராஜஸ்தானில் வளரச்சிபணிகள்,திட்டங்கள், ஏழு முக்கிய வாக்குறுதிகள் மூலம் பிஜேபியின் ஆயுதங்களை எதிர்கொண்டு,காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்கும் என்பதாகவும்.
முந்திய காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் பெயர்களை மாற்றியுள்ளது மோடி அரசு. இந்த திட்டங்களால் காங்கிரஸுக்கு நற்பெயர் ஏற்படகூடாது என்பதே இவர்களின் நோக்கமாக உள்ளது என்பதாக இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானில் வரும் 25 தேதி பேரவைதேர்தல் நடைபெறவுள்ளது.