Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

நாட்டுப்புற கலை! மற்றும் பண்பாட்டு கலைஞர்கள்!! பாதுகாத்திட அரசுக்கு கோரிக்கை!!
நிருபர்: அத்திக்கடை நசூர்தீன் Nov 19 2023 கலை இலக்கியம்

நாட்டுப்புற கலை! மற்றும் பண்பாட்டு கலைஞர்கள்!! பாதுகாத்திட அரசுக்கு கோரிக்கை!!

கொரடாச்சேரி நவம்பர் 19

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நாட்டுப்புற கலை, பண்பாட்டு கலைஞர்கள் மாவட்ட அமைப்பு பேரவை சார்பாக பேரணியும். கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஒரு நாட்டின் கலை மற்றும் கலாச்சாரம் அந்த சமூகத்தினைப் பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும்.கலை என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், கலாச்சாரத்தின் பாலமாகவும் திகழ்கின்றது.

கலை என்பது மனிதனின் மன உணர்வுகளின் வெளிப்பாடுகள் ஆகும்.குறிப்பாக நாட்டுப்புறக் கலைகள் நமது தாய் மண்ணோடும், நம் உணர்வுகளுடன் தொடர்புடையவை. நமது பாரம்பரியத்தையும் அடி ஆழத்தின் வேர்களையும் பிரதிபலிக்கும் சக்தியாகும்.கலை சமூக வளர்ச்சிக்கும்,மன எழுச்சிக்கும் சிறந்த ஒரு கருவி ஆகும்.

நமது முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள், ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் தான் இன்றைய தலைமுறையினர் அறியமுடிகிறது. இக்கலைகளே ஒரு சமுதாயத்தின் வாழ்வியல் ஆவணமாகத் திகழ்கின்றன. கிராமியக் கலைகளே தகவல் பரப்பும் ஊடகமாகவும்,மனிதனின் பழக்க வழக்கப் பண்பாட்டுப் பெக்கிஷமாக திகழ்ந்துள்ளன.நாட்டில் 1000 க்கும் மேற்ப்பட்ட நாட்டுப்புற கலைகள் இருந்துள்ளன.

இதில் தாரை,தப்பட்டை,மேளம் நாதங்கம்,தவில்,ஆதிமேளம்(பறை)

நையாண்டிமேளம்,கரகாட்டம் என நாட்டுப்புற கலைகள் அழிவின் விழும்பிலேயே இருந்துவருகிறது.

இதுபோன்ற கலைகளையும்,இதில் தங்கள் வாழ்நாளை அற்பணிக்கும்  கலைஞர்களையும் அரசு பாதுகாத்திடுவது மிகவும் அவசியமாகும்.மத்திய,மாநில அரசுகள் பெயரளவில் செயல்படாமல் போதுமான நிதி ஆதாரங்களை வழங்கிடவேண்டும்.

மேலும் நாட்டுப்புற கலைகளுக்கு பயிற்சி பள்ளிகள் தொடங்குவதும்.ஏழ்மை நிலையிலுள்ள வயது முதிர்ந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாழ்வுதியம் வழங்கிட வேண்டும் என்பன கோரிக்கைகள் மத்திய,மாநில அரசுக்கு வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பி.ஏ.காந்தி அவர்கள் தலைமையிலும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் MP அவர்கள் தொடக்கவுரையுடன்,வை.செல்வராஜ் அவர்கள் முன்னிலையிலும்,

எஸ்.கேசவராஜ்,ஆர்.சந்திரசேகர் ஆசாத், வாழ்த்துரையுடன் தொடங்கியது சி.சிவானந்தம்,

யு.பன்னீர்செல்வம்,சுரேஷ்குமார்,

நிர்வாகிகள் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

அமைப்புசாராத் ஒன்றிய செயலாளர் துரை கதிர்வேல் அவர்கள் இறுதியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துகொண்டர்.