அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
ஒன்றிய அரசின் கீழ் செயல்படக்கூடிய அமலாக்கத்துறை அதிகாரி மீது தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கக் கூடிய ஒரு துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த சம்பவம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அனைவராலும் திரும்பி பார்க்க செய்துள்ளது எனலாம்.
அமலாக்கத்துறை தற்போது ஓன்றிய அரசின் கைபாவை என்பதே உண்மையாகிவுள்ளது.இதில் உள்ள அதிகாரிகள் தூய்மையானவர்களாக நாம் கருதிவிடமுடியாது என்பதற்குப் இந்த சம்பவமே போதுமானதாகும்.
எதிர்கட்சியை மற்றும் பாஜகவுக்கு எதிரானவர்வகள் மீது தான் அதிக வழக்குகள் தற்போது நாட்டில் அமலாக்கத்துறையால் பதிவு செய்யபட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “ஒரு மனிதன் தவறு செய்திருப்பதினால் முழு அமலாக்கத் துறையும் தவறு எனச் சொல்ல முடியாது எனக் கூறியுள்ளார்.இதற்கு பக்க வாத்தியம் செய்து வருகிறார் அதிமுகவின் சி.வி சண்முகமும். இன்றைய அனைத்து தமிழக சில தொலைகாட்சிகளும் இந்த சம்பவத்தை ஊதி பெரிது படுத்தாமல் மடைமாற்றம் செய்திட தொடர்சியாக சொல்லிவருகிறது.
தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு.இந்த சம்பவத்தை நாம் இவற்றில் பொருத்திபார்த்தால் அண்ணாமலை கூறும் அமலாக்கத்துறையின் லட்சணம் நாட்டுமக்களுக்கு தெள்ளதெளிவாக புரிந்துவிடும் எனலாம்.
ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு தான் பதம் என்பார்கள்.
அதை தற்போது தமிழ்நாடு லஞ்ச ஓழிப்புதுறை அமலாக்கத்துறையின் ஒரு அதிகாரியை பதம் பார்த்துவிட்டது எனலாம்.இது ஒட்டு மொத்த அமலாக்கதுறை அதிகாரிகளின் லட்சணத்தை தற்போது நாட்டு மக்களுக்கும் காட்டிவிட்டது.
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது போல், கடந்த நவம்பர் மாதம் ராஜஸ்தான் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் நாவல் கிஷோர் மீனா, பாபுலால் மீனா என்ற இரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நாட்டில் அமலாக்கதுறை அதிகாரிகளின் மூன்று சோறுகளின் எண்ணிக்கையில் பதம் பார்த்தாகிவிட்டது.
அமலாக்கத்துறை போன்று தன்னிச்சை அமைப்புகளான CBI, IT போன்றவற்றை பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் காரணங்களுக்காக எதிர்க் கட்சியினர் மீது தவறாகப் பயன்படுத்துகிறது என்கிற குற்றச்சாட்டு எதிர் கட்சியினரால் ஏற்கனவே முன்வைக்கப்படுகிறது.
பொதுவாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் துறைகள் அனைத்தும் திறமை வாய்ந்தவை என்றும். அதில் தவறுகள் நடக்காது என்று நம்புவது உண்டு. ஊழலுக்கு எதிராகச் செயல்படும் துறை எனக் கூறிக்கொள்ளும் அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம் பெறப்பட்டது தற்போது பெரிய அளவில் நாட்டில் பேசு பொருளாகியுள்ளது.