நிருபர்: அத்திக்கடை நசூர்தீன்
Dec 09 2023
செய்திகள்
புதுடெல்லி டிசம்பர் 07
ராஜஸ்தான்,ம.பி,சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் கிடைத்த வெற்றி மற்ற வட மாநிலங்களிலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பாஜக குஷியாகி உள்ளது.
இதன் காரணமாகக் காங்கிரஸ் மற்றும் INDIA கூட்டணியால் வெற்றி பெற முடியாது என்ற கருத்து நிலவுகிறது.
எனவே, இப்பிரச்சினைக்கு எதிர்கொள்ள பெரியாரின் சனாதன கொள்கை கொண்ட திமுக உடனான உறவை முறித்துக் கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸின் சில மூத்த தலைவர்கள் தமது தலைமைக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
சனாதனம் என்பது இந்திய அரசியல் அமைப்பின் இல்லை என்றாலும் அது இந்திய மக்களின் வாழ்க்கை முறையாக உள்ளது. இதில் உடன்கட்டை ஏறுதல், விதவை மறுமணம் செய்துகொள்ள எதிர்ப்பு என இருந்தன.ஆனால் இவை மறைந்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதற்கு, பெரியார் போன்ற சமூக சீர்திருத்தத் தலைவர்கள் பலரின் உழைப்பும், அரசியல் சட்டங்களும் காரணமாக இருந்தது.
சனாதன ஒழிப்பு குறித்து ஒரு மாநில அமைச்சராகவும், முதல்வரின் மகனாகவும் உதயநிதி பேசியது மாபெரும் தவறு எனவும்.
இதற்கு உதயநிதி கூறியது அவரது தனிப்பட்டக் கருத்து என்று மம்தா, நிதிஷ்குமார் உள்ளிட்ட INDIA கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.
ஆனால் ராகுல், சோனியா, பிரியங்கா,கார்கே போன்ற முக்கியத் தலைவர்கள் காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்தக் கருத்தும் கூறவில்லை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாஜக அரசியல் ஆதாயம் அடைவதைத் தடுக்க, திமுகவுடனான உறவை முறிப்பதைத் தவிர்க காங்கிரஸுக்கு வேறு வழியில்லை எனக் கருதுகின்றனர்.
திமுகவால் தங்கள் மாநிலங்களில் இழப்பு ஏற்படும் என INDIA கூட்டணியில் உள்ள கட்சிகளும் தோல்வி பயம் அடைந்துள்ளன.
திமுகவுடனான கூட்டணி உறவு முறிந்தால் ஏற்படும் பலன் காங்கிரஸ் உட்பட INDIA கூட்டணியின் கட்சிகளின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்துத்துவா கொள்கைக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில், "திமுகவின் சனாதன எதிர்ப்புக்குக் காங்கிரஸும் மறைமுக ஆதரவளிக்கிறது” என்ற பிரச்சாரத்தை பாஜக வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கொண்டு செல்லத் தயாராகிவருகிறது.