பொதக்குடி டிசம்பர் 11
திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் சுன்னத் வல்ஜமாஅத் நலச்சங்கம் A.ஷாஹுல் ஹமீது (ஜப்பான்)மற்றும் வார்டு உறுப்பினர் திருமதி பாரிஸா அப்துல் கரீம் ஆகியோர்கள் முன்னெடுத்த தொடர் கோரிக்கையின் மூலம் சற்குரு தெருவிலிருந்து பெரிய பள்ளிவாசலுக்கு (மய்ய வாடி)க்கு பொதுமக்கள் செல்லும் சாலை குண்டும் குழியுமாகவும்,நடந்து செல்ல பயன்படுத்த முடியாத நிலையிலும், இருசக்கர வாகனத்தில் கூட பயணிக்க முடியாத அளவில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியும் இருந்துவந்தது.மேலும் இந்த சாலையில் குப்பைகள் மூலம் கொசுத் தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடும் இருந்து வந்தன.
இந்த அபாயச் சூழலை அரசின் கவனத்துக்கும், ஊராட்சி மன்றத் தலைவருக்கும் சரி செய்திடக் கோரிக்கையும், போராட்டங்கள் மூலமும் தொடர்ந்து எடுத்து வைத்ததின் பலனாக இந்தச் சாலையைச் மேம்படுத்திட நிதி ஒதுக்கப்பட்டு அரசின் ஒப்புதல்கள் நிறைவேறி உள்ளது.
இதற்கு உறுதுணை அளித்த மன்னார்குடி தொகுதியின் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் TRB.ராஜா அவர்களுக்கும்,திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திருமதி சாருஸ்ரீ IAS அவர்களுக்கும்,ஒன்றிய பெருந்தலைவர்செந்தமிழ் செல்வன் அவர்களுக்கும், மாவட்ட கவுன்சிலர் திருமதி ராணி சுந்தர்,ஒன்றிய கவுன்சிலர் திருமதி ராஜலெட்சுமி கார்த்திகேயன், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி மல்லிகா பிச்சையன்,பொதக்குடி நலனில் அக்கரையோடு ஒத்துழைப்பு தந்து வரும் திமுக கிளைச் செயலாளர் ஜனாப் A.தமிழன் ஜெய்லா மற்றும் அரசு அதிகாரி ஆகியோர்களுக்கு
பொதக்குடி சுன்னத் வல்ஜமாஅத் நலச்சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.