குஜராத் டிசம்பர் 10
எந்தப் பொருட்களையும் பாதி விலைக்கு நிர்ணயம் செய்தால் அதற்கு அமோக வரவேற்பை மக்களிடம் பார்க்கலாம். அதுபோல் நெடுஞ்சாலைத்துறை அமைக்கும் சுங்கச்சாவடியைப் போன்று போலியானதாக அமைத்து வழக்கமான கட்டணத்தில் வாகனங்களுக்குப் பாதி வரிவசூல் செய்து கோடிக் கணக்கில் பணத்தையும் மோசடி செய்துள்ளது ஒரு கும்பல்.
சுமார் ஒன்றரை வருடம் தேசிய நெடுஞ்சாலையில் போலியாகச் சுங்கச்சாவடி அமைத்துள்ளனர்.வாகன ஓட்டிகளும் போலி சுங்கச்சாவடி என அறியாமல் பாதி வாகன வரியில் தங்களுக்கு லாபமான சாலை என பயன்படுத்திவந்துள்ளனர்.
நாட்டில் பலவிதவிதமான மோசடியை நாம் பார்த்திருக்கிறோம். இந்த நூதன மோசடி இந்தியாவிலேயே முதல் முறையாகும்.இது நடந்துள்ளது.குஜராத் மாநிலம் மொர்பி மாவட்டத்தில் கட்ச் பகுதியை இணைக்கும் பாமன்போர்- கட்ச் தேசிய நெடுஞ்சாலையாகும். இந்த சாலையில் அரசு சுங்கச்சாவடியும் உள்ளது.
இந்தச் சுங்கச்சாவடிக்கு அருகில் உள்ள வர்கசியா கிராமத்தில் பீங்கான் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படாமல் இருந்துள்ளதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்த மோசடிக் கும்பல் இவற்றை போலி சுங்கச்சாவடியாக மாற்றிவிட்டனர்.
மேலும் சுங்கச்சாவடி நெடுஞ்சாலை அதிகாரிகளையும் ஏமாற்றி துணைச்சாலை அமைத்து வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு வரிவசூல் செய்துள்ளனர்.ஓரிரு நாளின்றிச் சுமார் ஒன்றரை வருடம் செயல்பட்டு வந்த போலி சுங்கச்சாவடி. அதிகாரிகளுக்குப் பின்பு தெரியவந்துள்ளது.சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது போலி சுங்கச்சாவடி எனத் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளரான அமர்ஷி பட்டேல், அவருடைய கூட்டாளிகள் வன்ராஜ் சிங் ஜாலா, ஹர்விஜய் சிங் ஜாலா, தர்மேந்திர சிங் ஜாலா, யுவ்ராஜ் சிங் ஜாலா உள்ளிட்டவர்களை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு சம்பவமாகக் குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் முன்னாள் IAS அதிகாரி ஒருவர் ஆறு போலி அலுவலகங்களை நடத்தி வந்து மோசடி செய்துள்ளார்.தற்போது கைது செய்யப்பட்டு சிறையுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.