Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

IUML தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் K.A.M முகம்மது அபுபக்கர் Ex MLA அவர்களுக்கு அய்மான் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி.
நிருபர்: அத்திக்கடை நசூர்தீன் Dec 15 2023 உலகச் செய்திகள்

IUML தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் K.A.M முகம்மது அபுபக்கர் Ex MLA அவர்களுக்கு அய்மான் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி.

அபுதாபி டிசம்பர் 14

அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H.M முஹம்மது ஜமாலூதீன் அவர்கள் தலைமையில் அமீரகத்திற்கு வருகைதந்த IUML தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் K.A.M முஹம்மது அபூபக்கர்  Ex MLA அவர்களுக்கு  அய்மான் சங்கத்தின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.

நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் அவர்கள் நிகழ்ச்சி தொகுத்து வழங்க மௌலவி  கலீல் ரஹ்மான் பிலாலி அவர்கள் இறைவசனத்துடன் ஆரம்பமானது.

அய்மான் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து பைத்துல் மால் தலைவர் அதிரை A சாகுல் ஹமீது ஹாஜியார் அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

IUML செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் முகம்மது பைக் அவர்கள் அறிமுக உரை   வழங்கினார்கள்.

 IUML தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் K.A.M முஹம்மது அபூபக்கர்  Ex MLA அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.

அத்துடன் நிகழ்ச்சிக்கு அமீராக காயிதே மில்லத் பேரவையின் நிர்வாகிகள், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் நிர்வாகிகள்,  காயல் நலம் மன்றத்தின் நிர்வாகிகள், தேவிபட்டினம் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் கட்டுமாவடி ஜமாஅத் நிர்வாகிகள், அபுதாபி மௌலிது கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அபுதாபியில்  வாழக்கூடிய தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் கலந்து  கொண்டு கண்ணியமான முறையில் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் அளித்தார்கள்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களுக்கு  அய்மான் சங்கத்தின் சார்பாக பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது  

நிகழ்ச்சியை அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர்  லால்பேட்டை மௌலவி  A. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, துணைத் தலைவர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி, துணைத் தலைவர் கீழக்கரை ஷேக் பரீத், துணைத் தலைவர் மதுக்கூர் Y. M. அப்துல்லாஹ், துணைத் தலைவர் காதர் மீரான் பைஜி, ஊடகத் துறை செயலாளர் தேவிபட்டினம் ஹாஜா முபினுதின், செயற்குழு உறுப்பினர் அம்பகரத்தூர் முஹம்மது கைசர், செயற்குழு  உறுப்பினர் கட்டுமாவடி  தஸ்தகீர் இப்ராஹிம், செயற்குழு உறுப்பினர்  கீழக்கரை அஜ்மல் தாகிர், செயற்குழு  உறுப்பினர் ஷேக் முகம்மது, விழா குழு செயலாளர் லெப்பை தம்பி உள்ளிட்டோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள் இறுதியாக சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் மெளலவி S.M.B ஹூசைன் மக்கி மஹ்ழரி நன்றியுரையுடன் துஆவுசெய்து நிகழ்ச்சி நிறைபெற்றது.

Related News