மதுரை டிசம்பர் 16
மருந்து வணிகத்தைப் பாதுகாத்திடவும், தொடர்ந்து நீடித்திடவும் ஆன்லைன் மருந்து வணிகத்தை தடைசெய்திட வேண்டி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கம் சார்பாக மதுரையில் நடைபெற்றது.
நாடு முழுவதும் சமீபகாலமாக ஆன்லைன் வணிகத்தில் மருந்து விற்பனை அதிகரித்துள்ளதாகவும். இவை அரசின் உரிய அனுமதியின்றி நடைபெறுவதோடு. இதில் தூக்க மாத்திரைகளும்,வலிநிவாரணிகளும் மருத்துவர்கள் பரிந்துரையின்றிச் சுலபமாகக் கிடைக்கச் செய்கின்றன. இதனால் சமூக சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.எனவே இவற்றை உடனடியாகத் தடை செய்திட வேண்டி மத்திய அரசை ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கையாகத் தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கத்தினர்கள் வலியுறுத்தினார்கள்.
மேலும் மருந்துகளின் விலைகளைக் குறைத்திடவும்,உயர்வுக்குக் காரணமான GST வரியில் விலக்கு அளித்து.நாடு முழுவதும் மருந்துகளின் விலையை ஒரே விலையாக நிர்ணயம் செய்திடவும்,மின்சார கட்டணம் குறைத்திடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாடத்தை மதுரை மாவட்ட TNPTA பொதுச்செயலாளர் M.S.சரவணன் அவர்கள் தலைமையில் வரவேற்புடன் நிகழ்ச்சி துவங்கியது.
G.கோபாலகிருஷ்ணன்,R.சுரேஷ்பாபு,K.சரவணன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
C மகேந்திரன் கும்பகோணம்,
S.ராமச்சந்திரன் செயலாளர் திருவாரூர் மாவட்டம்.T.நடராஜன் சென்னை மாவட்டம்,G.அசோக் திருவள்ளுவர் மாவட்டம்,மற்றும் மதுரை துணைமேயர் நாகராஜ் ஆகியோர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
இதில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் மருந்து வியாபாரிகள் சங்கத்தினர் ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இறுதியாக K.S. கணேஷ்பாபு அவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு வருகைதந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.