மதுரை டிசம்பர்30
நேற்று இரவு செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கத்தில் மருந்துக் கடை நடத்தி வரும் திரு.வினோத்குமார் அவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குத் தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மருத்துவர்களுக்கு அடுத்து மக்கள் நலனில் அக்கறை காட்டும் முக்கியஸ்தர்கள் நம் மருந்து வணிகர்கள் தான்.கொரோனா காலகட்டத்திலும் தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து மக்களுக்குச் சேவை செய்ய இரவு பகலாக உழைத்த போராளிகள் நம் மருந்து வணிகர்கள் தான்.தங்கள் உற்றார் உறவினர்களின் விசேஷங்களுக்குக் கூட கலந்து கொள்ள முடியாமல் மக்கள் சேவையே மகேசன் சேவை எனக் கருதும் நம் போன்ற சகோதரர் ஒருவரை இது போன்ற ஒரு கொடூரச் செயலினால் இழந்துள்ளோம் என்பதைப் பார்க்கும்போது நெஞ்சம் பதபதக்கின்றது.
திரு வினோத் குமாரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தாருக்கு நம் TNPTA சங்கத்தின் சார்பில் மிகுந்த வருத்தத்தையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டு தமிழ்நாடு அரசிடம் இந்தக் குடும்பத்திற்குத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றோம்.
மேலும் இந்தக் குற்றத்தைச் செய்த நபர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாகத் தமிழக அரசாங்கத்திற்குக் கோரிக்கை வைக்கின்றோம் என்பதாகக் இந்த கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.