அத்திக்கடை நசூர்தீன் DME.,
Dec 31 2023
நாடும் நடப்பும்
31 டிசம்பர் 2023
தென்னிந்தியாவில் பூர்வீகக் குடிமக்கள் பறையர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
அன்றைய காலக்கட்டத்தில் பறையர்கள் பல கஷ்டங்கள்,சாதிய அடக்குமுறையின் காரணமாகத் தமிழகத்தில் பிற மதங்களைத் தழுவுள்ளனர்.இதில் கணிசமானவர்கள் இஸ்லாத்தையும், கிருத்துவத்தையும் ஏற்றுள்ளனர். இச்சமூகக்குழுவினது பெயர் “பறை” என்பதிலிருந்து தோன்றியதாகும். பறை என்ற தமிழ் வார்த்தைக்குச் சொல் என்ற பொருளாகும். இன்னமும் கூட கேரளாவில் பறை என்பது 'சொல்'என்ற பொருளிலேயே பேசப்படுகின்றது.
இந்தியாவின் ஓர் இனம் அல்லது சமூக குழுவினர், இவர்கள் அதிகமாகத் தமிழ் நாடு,கேரளா மற்றும் இலங்கை நாட்டில் வாழ்கின்றனர். தமிழ்நாட்டில் மூன்று வெவ்வேறு பெயர்களில் இவர்கள் அழைக்கப்பட்டாலும், பறையர் என்று பொதுவாக அறியப்படுகின்றனர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் பறையர் என்றும், தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை [மறையர்] வள்ளுவ வேளாளர், ஆதி திராவிடர் என்று அழைக்கப்படுகின்றனர்.
1881-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “CENSUS OF BRITISH INDIA” என்ற நூலில்“தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசிய” 83 பறையர் உட்பிரிவுகளைக் குறிப்பிடுகின்றது. அதில் மதராஸி பறையன் என்ற ஒரு பிரிவும் உள்ளன. தென்னிந்தியர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகள். தமிழ் மூத்த மொழியாகவும். மலையாளம், கன்னடம்,தெலுங்கு எனத் தென்னிந்திய மொழி குழுமமாகப் பார்க்கப்படுகின்றன.
இவை இப்படியிருக்கத் தற்போது குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா குறிப்பிடுகிறார். குடியுரிமைச் சட்டம் என்ற பெயரில் இந்திய முஸ்லீம்களை ஒன்றிய பாஜக அரசு அச்சுறுத்தி வருகிறது.
நியாயமாக இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால் கைபார் கனவாய் வழியாக வந்தவர்களுக்குத் தான் குடியுரிமை இல்லாமல்போகும். பூர்விக குடிகளை ஆழமானதாக ஆய்வுக்குக் கொண்டு சென்றால் தமிழகத்தில் மற்றும் தென்னிந்திய முஸ்லீம்களை அரபு நாட்டிலிருந்து வந்த குடிமக்கள் இல்லை என்பது பாஜகவுக்குத் தெரியும், தெரிந்தாலும் முஸ்லீம்களை வைத்து அரசியல் செய்கிறது பாஜக.
இன்றைக்கு முஸ்லீம்கள் என்கிற ஒரே காரணத்தால் இவர்களுக்கான உரிமைகள் நாட்டில் இல்லாமல் நீர்த்துப் போகச் செய்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இந்தியாவில் அரசு வேலைவாய்ப்புகளில், பதவிகள் இல்லாமல் தற்போது மறுக்கப்படுகிறது.இவற்றைப் பிற சமூக மக்களை விடப் பார்ப்பன சமூகம் தான் தனது சதவீதத்தைக் காட்டிலும் பதவிகளிலும், ஆட்சி அதிகாரத்திலும் கூடுதலாகவே அனுபவித்து வருகிறார்கள். இன்று நாடாளுமன்றத்தின் தனிச்சையாக சட்டங்களை ஏற்றி பாஜக அரசு முஸ்லீம்களுக்கு எதிரான அனைத்தையும் நிறைவேற்றிவருகிறது.வடகிழக்கு மாநிலத்தில் சிறப்பு
அந்தஸ்தைக் கண்டுகொள்ளாத பாஜக அரசு. காஷ்மீரில் மட்டும் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது.
பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லீம்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகப்படுத்தப்படுகிறது.
உரிமைகளை இழக்க முஸ்லீம்கள் வெளிநாட்டுக் குடிமக்கள் இல்லை என்பதை முதலில் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள்தான் உணரவேண்டும்.
உனக்கான உரிமைகளைக் கேட்டுப் பெற அரசியலில் உன்னை இணைக்காமல் சாக்கடை என ஒதிங்கிகொண்டால் இந்தச் சமூகம் மீண்டும் அடிமையாகிவிடும்.
அரசியலை உனக்கான அதிகாரம் பெற அறிவியலாகக் கையாள வேண்டுமே தவிர.இவற்றை விட்டு விலகி உரிமைகளை இழப்பது அறிவுடைமை ஆகாது. இது முஸ்லீம்களின் எதிர்காலச் சமூகத்துக்கான பாதுகாப்பை உருவாக்கிட விதையாக உருவெடுக்கும்!! எப்பொழுதும் இந்தியாவில் அடக்குமுறைக்கு எதிராக முதல் எழுச்சிக்குரியவர்கள் முஸ்லீம்கள் என்பது வரலாறு ஆகும்.