கூத்தாநல்லூர் ஜனவரி 02
சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி ஓட்டேரியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் மருந்துக்கடை நடத்திவந்தார்.
இதே பகுதியைச் சேர்ந்த ரவுடி கும்பல் இவரிடம் மாமூல் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.இவற்றைக் காவல்துறையில் இவர் கொடுத்த புகாரின் பெயரில் ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.இந்த நிலையில் வழக்கைத் திரும்பப்பெற ரவுடிகள் மிரட்டியதுடன் இவற்றை வினோத்குமார் மறுத்ததின் காரணத்தால் கடந்த 29 தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றவரை ரவுடிகள் படுகொலை செய்துள்ளனர்.இதைக் கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் கருப்பு பட்டை அணிந்து வர்த்தகம் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூத்தாநல்லூர் தாலுகா மருந்து வணிகர் சங்கத் தலைவர் P.கண்ணன்,செயலாளர் நூர்மைதீன்,மாவட்ட மக்கள் தொடர்பு மருந்து வணிகர்கள் அணித் தலைவர் M.அண்ணாமலை,மாவட்ட செயற்குழு உறுப்பினர் அத்திக்கடை நசூர்தீன் ஆகியோர் முன்னிலையில் கூத்தாநல்லூரில் அரசு மருத்துவமணை எதிரில் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட மருந்து வணிகர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இது குறித்து திருவாரூர் மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் அவர்கள் கூறுகையில் வினோத்குமார் படுகொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யவேண்டும்.குடும்பத்தினர்களுக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்குவதோடு மருந்து வணிகர்களின் பாதுகாப்புக்கு எனத் தமிழ்நாடு அரசு தனிச் சட்டம் இயற்றிடவேண்டும் என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.