Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

பில்கீஸ் பானு வழக்கு கடந்த பாதை !பெண்கள் மரியாதைக்குறியவர்கள் எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம்.11 பேர் சரண்டைய உத்தரவு!!
அத்திக்கடை நசூர்தீன் DME., Jan 16 2024 நாடும் நடப்பும்

பில்கீஸ் பானு வழக்கு கடந்த பாதை !பெண்கள் மரியாதைக்குறியவர்கள் எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம்.11 பேர் சரண்டைய உத்தரவு!!

ஐனவரி 16

இன்றைய பிரதமர் மோடி அவர்கள் அன்றைக்குக்  குஜராத்தின் முதல்வர். இவரது பதவிக்காலத்தில்

கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம் குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்றதைத் தொடர்ந்து மிகப்பெரிய மதக்கலவரம் மாநிலம் முழுவதும்  நிகழ்த்தப்பட்டது.இது உலக அரங்கில் இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.

இந்த மதக்கலவரத்தில் பல அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர், பெஸ்ட் பேக்கரி தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கடைகள் அடித்து நெருக்கப்பட்டன.

குஜராத் மதக்கலவரத்தில் பில்கிஸ்பானு என்ற பெண்மணிக்குக் கண் முன்னே நடந்த கொடுமையான நிகழ்வுகள் ஒட்டு மொத்த மனிதக்குலமும் தலைகுனிவை எற்படுத்தகூடியதாகும். அவர்கள் வசிக்க கூடிய பகுதிகளைச் சேர்ந்தவர்களால் இது நிகழ்த்தப்பட்டுள்ளது.

இவரது குடும்பமும்  இந்தப் பயங்கரவாதிகளால்  தாக்குதலுக்கு உள்ளானது.அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும், இந்தக் கலவரத்தின்போது கொலை செய்யப்பட்டனர்.

இதே நேரத்தில் நடந்த மிகப் பெரிய கொடுமை பில்கிஸ் பானு 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த அவரை,11 பேரும் இரக்கமின்றிக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக இவர்களிடமிருந்து பில்கிஸ் பானு படுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்.

இந்த நிகழ்வைச் சிந்தித்துப் பார்த்தால் கற்பனைக்கே எட்டாத துயரங்களுக்கு பில்கீஸ் பானு ஆளாகியுள்ளார். குஜராத் மதக்கலவர சம்பவத்துக்குப் பின்னர் மோடி பிரதமரானர்.அமித்ஷா உள்துறை அமைச்சர் என்று பதவி உயர்ந்தனர்.

இவற்றை  ஒன்றிய காங்கிரஸ் அரசு பாபர் மசூதி பிரச்சனைகளிலும் சரி,குஜராத் மதக்கலவரத்திலும் சரி முஸ்லீம்கள் மீது குஜராத்தில் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர்களையும் அன்றைய காங்கிரஸ் மத்திய அரசு குஜராத் மோடி அரசு மீது துரிதமான நடவடிக்கை எடுக்க தவறியது. விளைவு காங்கிரஸின் மென்மையான போக்கின் காரணமாகவே பாஜகவிடம் மத்தியில் ஆட்சியைப் பறிகொடுத்து இன்று வரை ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை.

இந்தநிலையில் பில்கீஸ் பானு வழக்கில் 11 பேர்கள் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுச் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2008ஆம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  அடுத்து மும்பை உயர்நீதி மன்றமும் உறுதி செய்தது. 

அப்படி ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிருந்த 11 குற்றவாளிகளும், 10-15 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு  குஜராத் அரசின் முடிவுகளால் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

இதுபோன்ற குற்றச்சம்பவங்களுக்கு இப்படி ஒரு முடிவானது  நீதியை விரும்பக் கூடியவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகும். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் ஒருபுறம் இருந்தாலும். மறுபுறம்  பாஜகவினர் இனிப்பு வழங்கி இவர்களுக்கு வரவேற்பு அளித்தனர்.

குஜராத் அரசின் இந்த விடுதலை முடிவு இது போன்ற சமூக குற்றவாளிகளுக்கு ஊக்கத்தை அளிக்கூடியதாகும். இவற்றை ஏற்றுக்கொள்வது இந்திய ஜனநாயகத்துக்கும் ஆபத்தைத் தரக்கூடியது. நீதிமன்றங்களுக்குத் தவறான தகவல்களை அளித்து குஜராத் அரசு இவற்றைச் செய்துள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடுகிறது. குஜராத் அரசு மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று விடுதலை செய்துள்ளதாக நலுவ செய்கிறது.

குஜராத் அரசின் இந்த முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 11 ஆண்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக பில்கீஸ் பானு என்ற பெண்ணினம் அடைந்த பாதிப்பு ஆண்களுக்குத் தெரியாது என்பது இந்த 11 பேர் விடுதலை ஒர் சிறந்த உதாரணமாகும்.

ஒரு பெண்ணின் பாதிப்பின் வலிகள் ஒரு பெண்ணுக்குத் தான் முழுமையாகத் தெரியும் என்பது போல் பில்கிஸ் பானுவுக்கு ஆதரவாக நின்ற முதல் பெண்மணி முன்னாள் MPயும் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவருமான சுபாஷினி அலி. அடுத்து ஆதரவுக்கரம் நீட்டியவர், பேராசிரியை ரூப்ரேகா. 11 குற்றவாளிகள் விடுதலையானதைக் கண்டு பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்த இவர்கள்  டெல்லியில் இதுகுறித்து ஆலோசனை செய்தனர்.

இவர்களுடன் மூன்றாவதாகப் பத்திரிகையாளர் ரேவதி லாலும் பில்கிஸுக்கு இவர்களுடன் இணைந்தார். இதைத் தொடர்ந்தே, இவர்கள் மூலம் பொதுநல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டன. இவர்களுடன் நான்காவதாகச் சமீபத்தில் MP. பதவி பறிக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ராவும் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக கபில் சிபல், விருந்தா குரோவர் மற்றும் இந்திரா ஜெய்சிங், மீரான் சாதா போர்வான்கர், ஷோபா குப்தா போன்றவர்கள் ஒன்றிணைந்தனர்.

இந்த நிலையில்தான், இவ்வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா தலைமையிலான அமர்வு விரிவான விசாரணை செய்து கடந்த ஜனவரி 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

விடுதலை தொடர்பாகத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தண்டனை பெற்றவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான உத்தரவைப் பிறப்பிக்கக் குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும். குஜராத் அரசின் இந்த முடிவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். அவர்களின் மரியாதை மிகவும் முக்கியம். பெண்கள் மரியாதைக்குரியவர்கள் எனத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், முன் விடுதலை செய்யப்பட்டவர்கள் 11 பேரும், அடுத்த 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.

இது குறித்து பல்கீஸ்பானு குறிப்பிடுகையில் தன் மீது இருந்த பாரத்தை இறக்கிவைத்து மூச்சு விடும் அளவிற்கு ஆறுதல் அளிப்பதாகக் கூறியுள்ளார். ஆளும் அரசுகளை விட நாட்டு மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாக்க நீதிமன்றங்கள் மீதே  தற்போது முழு நம்பிக்கையை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்கீஸ் பானுவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்த 11 நபர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்ட வேண்டும். இருந்தாலும் உச்சநீதி மன்றம் இந்தத் தீர்ப்பின் மூலம் பாஜகவிற்கும்,மோடி அரசுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News