Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அத்திக்கடையில் ஊராட்சி மன்றம்,அரசு பள்ளிகளில் 75வது குடியரசு தினவிழா நடைபெற்றது.
நிருபர்:அத்திக்கடை நசூர்தீன் DME., Jan 26 2024 தமிழக செய்திகள்

அத்திக்கடையில் ஊராட்சி மன்றம்,அரசு பள்ளிகளில் 75வது குடியரசு தினவிழா நடைபெற்றது.

அத்திக்கடை ஜனவரி 26

திருவாரூர் மாவட்டம் அத்திக்கிடையில் 75 வது இந்திய குடியரசு தினவிழா ஊராட்சி மன்றம்,அரசினர் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பாத்திமாபீவி பாவாபகுருதீன் அவர்களும்,ஊராட்சி ஒன்றிய ஆண்கள் துவக்கப்பள்ளியில் அத்திக்கடை ஜமாஅத் தலைவர் A.A.அப்துல் முகம்மது அவர்களும்,ஊராட்சி ஒன்றிய பெண்கள் துவக்கப்பள்ளியில் T.M.நிலாபுதீன் அவர்களும்,அரசினர் உயர்நிலைப் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் MMY ஜெஹபர் சாதிக் அவர்களும் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.

நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் ஹலில், ஜாஹிர்உசேன்,சலீம்,ஊராட்சி செயலர் கலைராஜா,மதி மற்றும் பொதுமக்கள்,ஆசிரியர்கள் மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள்,பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்,அரசு மருத்துவமனை செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

Related News