அத்திக்கடை ஜனவரி 26
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அத்திக்கடை ஊராட்சியில் 75 வது இந்தியக் குடியரசு தின கிராம சபைக் கூட்டம் அல் அரஃபா திருமண மண்டபத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பாத்திமாபீவி பாவாபகுருதீன்,துணைத்தலைவர் MMY ஜெஹபர்சாதிக் தலைமையில், R.முருகானந்தம் துணைத்தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது.
01/04/23 முதல் 26/01/24 வரையிலான 635851.00 ரூபாய் வரவாகவும்,413384.00 ரூபாய் செலவினங்களாகவும் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.குடிநீர் வழங்குதல்,சுகாதாரப் பணிகள்,சாலை வசதிகளுக்கான மேல் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஊராட்சி மன்றம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஊரில் நாய்களின் பெருக்கம் அதிகமாகவும் இதனால் வரக்கூடிய ஆபத்துகள். இரவு நேரங்களில் மாடுகள் சுற்றித்திரிவது மற்றும் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றவும்,குப்பைக் கிடங்கு ஏற்படுத்திடவும் இவைகள் தீராத பிரச்சனைகளாகக் உள்ளன என கூட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் தெரிவித்துக்கொண்டனர்.
இத்துடன் அரசினர் உயர்நிலைப் பள்ளி மற்றும் விளையாட்டு மைதானம் முழுவதும் தற்போது சுற்றுச்சுவர் கட்டப்படுவதற்கு நன்றியும்.3/4 அடி,(அ)4.6 அங்குலம் சுவர் கட்டுவதற்கான அளவு குறித்து ஒப்பந்த விபரத்தினைக் கேட்கப்பட்டது.
குப்பைக் கிடங்கு அமைப்பதற்கான இடம் கிடைக்கப் பெறுவதில் ஊராட்சியில் உள்ள சிரமத்தினையும்.தெருக்களில் குப்பைகளைச் சுத்தம் செய்தவுடன் உடனடியாகவே குப்பைகள் சேர்ந்து விடுவதுமாக உள்ளன. இந்த தூய்மைப் பணிகள் தொடர்ந்து ஊராட்சி மூலம் செய்து வருவதாகவும்.அரசினர் பள்ளியின் சுற்றுச்சுவர் 4.6 அங்குலம் அளவுகளில் தான் அமைக்கப்பட ஒப்பத்தம் செய்துள்ளதாக ஊராட்சி மன்றம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
வீட்டில் சேரும் குப்பைகளை முறையாக போடுவதற்கு உரிய வசதிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள், குப்பைகளைத் தெருக்களில் வீசிச் செல்லும் அவலம் ஏற்படுவதாகவும், இதனால் நிலம், ஆறு,குளம்,வாய்க்கால் என அனைத்தும் மாசுபடுவதாகவும். இதற்கு நிரந்தரத் தீர்வாக அத்திக்கடை ஊராட்சிக்குக் குப்பைக் கிடங்கு தேவைப்படுகிறது. அல்லது குறைந்தபட்சம், குப்பைகளைத் தரம் பிரிக்கும் நிலையம் அமைக்க வேண்டும் எனவும்,ஊரில் வாய்க்கால்கள், குளங்கள்,அனைத்தும் பல ஆண்டுகளாகத் தூர் வாரப்படாமல் இருப்பதால் இவற்றைத் தூர்வார மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக அதன் நிர்வாகிகள் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் ஜென்னத்துல் ராபியா,சலீம்,சிராஜ்நிஷா,ஜாஹீர் உசேன்,ஜவஹர்நிஷா,ஜமாத் துணைத்தலைவர் ஹலிகுல்ஜமான்,செயலாளர் KB.சுல்தான் ஆரிப், கலைராஜா,மதி,மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.