Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

நள்ளிரவிலும் வீரதீரச் செயல்! ரயில் விபத்தை தடுத்த தம்பதியருக்கு நேரில் அழைத்து பாராட்டிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.
அத்திக்கடை நசூர்தீன் DME., Feb 29 2024 தமிழக செய்திகள்

நள்ளிரவிலும் வீரதீரச் செயல்! ரயில் விபத்தை தடுத்த தம்பதியருக்கு நேரில் அழைத்து பாராட்டிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்.

தென்காசி பிப் 27

தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை கிராமம், S-வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில், நள்ளிரவு 1 மணி அளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி கட்டுப்பாடு இழந்து நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள கீழே செல்லும் தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

அப்பகுதியில் அங்கே வசித்து வந்த  சண்முகையா,மனைவி வடக்குத்தியாள் தம்பதியினர் செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோயில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயில் வரும் சத்தத்தைக் கேட்டு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் விளக்கு ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து, ரயிலை நிறுத்தியுள்ளனர். இதனால் ஏற்படவிருந்த பெரும் ரயில் விபத்தைத் தடுத்துள்ளனர்.

காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் தகவலறிந்த உடன் விரைந்து வந்தனர். அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

இந்த இக்கட்டான தருணத்திலும் தங்களது முதிர்ந்த வயதையும் பொருட்படுத்தாமல், நள்ளிரவு நேரத்தில்  பெரும் விபத்து ஏற்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்குத்  தண்டவாளத்தில் லாரி விபத்துப் பகுதிக்கு முன்பாக சென்று ரயிலை நிறுத்தியுள்ளனர். 

இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்கள் மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தக்கூடியது.இந்த மனிதநேயப் பணிகளைச் செய்த சண்முகையா,மனைவி வடக்குத்தியாள் தம்பதியினரின் செயல்கள் பாராட்டக் கூடியது. இந்த வீரதீரச் செயலைப் உடனடியாக பாராட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Related News