அத்திக்கடை மார்ச் 08
திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா அராஃபா திருமண அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் வரவேற்புரை பள்ளி தலைமை ஆசிரியர் நெ.மலர்வழியும்,ஊராட்சி மன்றத் தலைவர் பாத்திமா பாவா பகுருதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. M.M.ஜெஹபர்சாதிக்,A.A.அப்துல் முகமது,K.M ஹலிகுல் ஜமான்.K.B சுல்தான் ஆரிப்,A ஜெகபர்தீன்,T.A நிலாபுதீன்,A.M ஜெகபர்தீன்,
S.சசிகலா,S.ராபியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் ஆண்டறிக்கையை பா.வனிதா வாசித்தார். இரா.சௌந்தரராஜன் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும்.விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை ஒன்றியக் குழு துணைதலைவர் இரா.பாலச்சந்திரன் அவர்கள் வழங்கினார்கள்.
நடனம் ஆடிய மாணவர்களுக்குப் பரிசுகளை வி.விமலா அவர்களும்.பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்குப் கி.சுமதி அவர்கள் பாராட்டு பரிசினை வழங்கினார்.
மேலும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் பெத்த பெருமாள்,
க.முருகானந்தம்,கெ.குணசேகரன்,
சா.பாஸ்கரன். த.சதீஸ்குமார்,
சி தீபன், வை.இளையபாரதி, ந.இராஜேந்திரன் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஊராட்சி ஒன்றிய ஆண்கள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரும்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில தலைவருமாகிய திருவாளர் R.ரவி அவர்கள். முப்பெரும் விழாவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்கள்.
ஊக்கதொகை,உயர்கல்வி மருத்துவ படிப்பில் 7.5 % இட ஒதுக்கீடு போன்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசும்,பள்ளி கல்விதுறையும் பல சலுகைகளை வழங்கி சிறப்புடன் பணியாற்றும் இவ்வேலையில் அரசு பள்ளி மாணவர்களின் கலை மற்றும் நடன நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதுடன் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சு.லதா அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டார்.