மார்ச் 10
தமிழக முஸ்லீம்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தமிழ்நாடு அரசுக்கு முஸ்லீம்கள் தொடர்ச்சியான கோரிக்கையின் பலனாக திமுக ஆட்சியில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் முஸ்லீம்களுக்கான 3.5% தனி இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
இதன் காரணமாகக் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு தற்போது தமிழ்நாடு அரசால் நடைமுறை படுத்திவருகிறது.
இந்த நிலையில் பிற மதங்களிலிருந்து முஸ்லீமாக மதம் மாறியவர்களுக்கு இந்த 3.5% முஸ்லீம்களின் தனி இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்த முடியாத நிலை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
முஸ்லீமாக மதம் மாறியவர்களுக்கு ஏற்கனவே இருந்த மதத்தின் பிரிவிலும் இட ஒதுக்கீடு வழங்க படாமலும், முஸ்லீம்களின் இட ஒதுக்கீடும் கிடைக்காத நிலையில் பாதிப்பைப் பெற்றனர்.
முஸ்லீமாக மதம் மாறிய பிற மதத்தினரை லெப்பை,மரைக்காயர்,ராவுத்தர்
என எந்தப் பிரிவில் சேர்ப்பது அல்லது இவர்களுக்கான தனியாக ஒரு பிரிவை உருவாக்குவதா என்ற குழப்பம் இருந்த நிலையில். முஸ்லீம் சமூகம் பிற சமுதாய மக்கள் முஸ்லீம்களாக மதம் மாறினாலும் முஸ்லீம்கள் இவர்களுக்கான பிரச்சனையில் பெரியதாக ஒன்றும் செய்யவில்லை.
இதனால் முஸ்லீமாக மதம் மாறியவர்கள் பல பிரச்சனையைச் சந்தித்தும்,சமூகம்,குடும்ப ரீதியான நெருக்கடிக்கும் உள்ளானார்கள்.
பிற மத படித்தவர்கள் விரும்பி இஸ்லாத்திற்கு வருகை தந்தவர்கள் TNPSC போன்ற தேர்வுகள் எழுதி வெற்றி பெற்றுள்ளனர்.இவர்கள் முஸ்லீமாக மதம் மாறியதால் 3.5% இட ஒதுக்கீடு கிடைக்காத நிலையில் இவர்களுக்கு மேலும் மனவலியை உருவாக்கித் தந்தது.
இதுதொடர்பாக நீதிமன்றம் சென்றும் இந்தப் பிரச்சனையை ஆவணம் செய்யும்படி அரசுக்கு நீதிமன்றம் கேட்டுக் கொண்டதைத் தவிர எவ்வித உத்தரவும் வழங்கவில்லை.
நீதிமன்றமும் தங்களுக்கான பணி ஆட்கள் தேர்வில் மட்டும் 3.5% த்தில் தனிப்பட்ட முறையில் இவர்களை பணி நியமனம் செய்து நடைமுறை படுத்திகொண்டனர்.
மமக,விசிக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் ஜவாஹிருல்லாவும்,ஷாநவாஸ் அவர்களும் இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமலிருந்து வந்தது. தற்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் 3.5% இட ஒதுக்கீட்டில் கல்வி,வேலை வாய்ப்பில் முஸ்லீமாக மதம் மாறிய பிற பிரிவினருக்கும் வழங்கலாம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணை வந்துள்ளது.மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முஸ்லீம்களுக்குச் செய்த ஒரு வரலாற்று நிகழ்வாகும்.
இவற்றிற்குத் தமிழக முஸ்லீம் சமூகம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் சிறுபான்மையினர் நலத் துறைக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கின்றனர்.