கோவை மார்ச் 13
சில நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தேவைக்குப் பொய் சொல்வது மனிதனின் இயல்பு. ஆனால் பொய் சொல்வதையே வேலையாக வைத்திருப்பவர்களை என்ன சொல்வது.அப்படிப்பட்ட பொய்களை சாதாரண மனிதன் பேசுவதைவிடப் பதவியில் இருக்கும்போது ஒருவர் காலமெல்லாம் சொல்லும் செய்திகள் அனைத்தும் பொய்களாகவே இருக்கும்போது அவற்றை கேட்கும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்.அப்படிப்பட்ட வார்த்தை மோதல் மோடி,ஸ்டாலின் மத்தியில் தேர்தல் பிரச்சாரமாக சூடுபிடித்துள்ளது.
சென்னையில் துவங்கிய தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அளிக்கும் உத்தரவாதம் என்று தாமரை மாநாட்டில் பேசியதாவது.
சென்னை போன்ற மாநகரங்கள் வளர்ச்சியடைய மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், சென்னையில் பல ஆயிரம் கோடி மதிப்பில் நகர்ப்புறத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை உட்பட தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்காக மத்திய அரசு தீவிரமாகப் பணியாற்றுகிறது.
ஆனால், மாநிலத்தில் அதிகாரத்தில் இருக்கும் திமுக அரசு, சென்னைவாசிகளின் தேவைகளை, அவர்களின் கனவுகளைக் கண்டுகொள்ளவில்லை. புயல் தாக்கியபோது அவர்களுக்கு உதவிசெய்வதற்குப் பதிலாக திமுக அரசு மக்களுக்குத் துயரங்களையே அதிகமாக்கியது.
திமுகவினர் வெள்ள மேலாண்மைக்குப் பதிலாக ஊடக மேலாண்மை செய்தனர். தமிழக மக்கள் மீதும் தமிழ்நாடு மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை நலத்திட்டங்களுக்கான தொகையை மத்திய அரசு நேரடியாக வங்கிக் கணக்கில் பயனாளிகளுக்கு அனுப்புகிறது. பல லட்சம் கோடி ரூபாய் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குக்கு சென்றடைந்துள்ளது.
இந்தப் பணத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதுதான் திமுகவினருக்கு இருக்கும் சிக்கல். இந்த விஷயத்தில் மொத்த திமுக குடும்பமும் பயங்கர வயிற்று எரிச்சலில் இருக்கிறது.
உங்கள் எண்ணம் நிறைவேறாது. தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அளிக்கப்படும் பணத்தையாரும் பறிக்க மோடி ஒருபோதும் விடமாட்டார்.
நீங்கள் ஏற்கெனவே எடுத்த கொண்ட பணமும் திரும்ப வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்காகவே செலவழிக்கப்படும் எனப் பிரதமர் மோடி திமுக வை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
இதற்குக் கோவை மாவட்ட நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,
மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாத போதே, இத்தனை சாதனை திட்டங்களை நம்மால் கொடுக்க முடிகிறது என்றால், நமக்கு உதவி செய்கின்ற மத்திய அரசு அங்கே அமைந்திருந்தால், இன்னும் பத்து மடங்கு சாதனைகளை இந்த திமுக செய்திருக்கும். அதற்கான நேரம் நெருங்கி வருகிறது.
நாட்டு மக்களுக்கு எதையுமே செய்து தராத பிரதமர், ’மோடியின் உத்தரவாதம்’ என்று பக்கம் பக்கமாக விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் பிரதமர் ஆவதற்கு முன்பு கொடுத்த உத்தரவாதமான ஒவ்வொருவருக்கும் 15 இலட்சம் ரூபாயின் இன்றைக்கு என்ன ஆனது. இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உத்தரவாதம் தந்தீர்களே அதன் நிலை என்ன.
அதுகூட வேண்டாம், அடுத்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டுக்கு வருவதாகச் செய்தி வந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்குச் செய்து தந்திருக்கின்ற சிறப்புத் திட்டங்களைப் பட்டியலிடுங்கள்!
என்ன சிறப்புத் திட்டங்கள் கொண்டு வந்தீர்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் எல்லாரும் கேட்கவேண்டும்! ”பதில் சொல்லுங்கள் பிரதமரே..” என்று எல்லோரும் கேட்க வேண்டும். கேட்பீர்களா!
பா.ஜ.க. கொண்டு வருகின்ற திட்டங்களை தி.மு.க. தடுக்கின்றது என்று பிரதமர் சொல்கிறார். அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை, நாம் சென்று தடுக்கிறோமா!
நீங்கள் ஒரு பழமொழி கேட்டிருப்பீர்கள், அண்டப் புளுகு ஆகாசப் புளுகென்று சொல்லுவார்கள் அது போல
இது மோடி புளுகு! அவர் என்ன திட்டத்தைக் கொண்டு வந்தார் நாம் தடுப்பதற்கு? நான் ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை 2014-ல் அறிவித்தார்கள். அப்போது யார் தமிழ்நாட்டில் முதலமைச்சர்? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்தார். அவர் வந்து தடுத்தாரா? இல்லையே.
அடுத்து, உங்கள் நண்பர்கள் OPS ,EPS அவர்கள் தடுத்தார்களா? இல்லையே. 2021-ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம், நாங்கள் தடுத்தோமா? இல்லை, தமிழ்நாட்டு மக்கள்தான் தடுத்தார்களா? இல்லையே? உங்களை யாரும் தடுக்கவில்லையே! ஆட்சியில் இருந்த பத்து வருஷமாக தமிழ்நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்காமல், தேர்தலுக்காக பத்து நாள் வந்து பொய் சொன்னால் தமிழ்நாட்டு மக்களான நாங்கள் என்ன ஏமாளிகளா? நாங்கள் என்ன இளிச்சவாயர்களா?
பொய்யும், வாட்ஸ்அப் கதைகளும்தான் பா.ஜ.க.வின் உயிர்மூச்சு! இனி இந்தப் பொய்களும் கட்டுக்கதைகளும் மக்களிடம் எடுபடாது! மாநிலத்தைக் கெடுத்த அதிமுக - மாநிலத்தைக் கண்டு கொள்ளாத பா.ஜ.க! இந்தக் கள்ளக்கூட்டணியை மக்கள் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலனே முக்கியம் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய, நமது திராவிட மாடல் அரசுக்கு, தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் துணை இருப்பது போல், உண்மையான வளர்ச்சியை நமது நாடு காண, ஒட்டுமொத்த இந்திய மக்களும் தயாராகிவிட்டார்கள் என்று ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.