புதுடெல்லி மார்ச் 16
ஒரு நாட்டில் நடக்கும் அநீதிகளையும்,முறைகேடுகளைப் பத்திரிக்கைகள் மற்றும் டிவி போன்ற ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரக் கூடியவர்கள் தான் பத்திரிகையாளர்கள்.
ஆனால் இந்தியாவில் தற்போது உள்ள பெரும்பான்மையான ஊடகங்கள் உண்மையான தகவல்களைக் கூறுவது இன்றி. பாஜக பற்றியும்,மோடியைப் பற்றியும் சார்பு நிலை செய்திகளைத் தெரிவிக்கும் ஊடகங்களாக விலை போகிவிட்டன.
உண்மைக்கு மாற்றமான செய்திகளையும்,தங்களுக்கு ஆதாயம் அளிக்கக்கூடியவர்களின் மிகை படுத்தப்பட்டப் பொய்யான செய்திகளைத் தான் அதிகம் தெரிவிக்கின்றனர்.
ஆனால் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பத்திரிக்கையாளர்கள் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தாலும்.உண்மை செய்திகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து மக்களுக்குச் சேர்க்கின்றனர். இவர்களின் ஊடகப் பணி என்பது இன்றைய தகவல் உலகில் மகத்தானது என்று குறிப்பிடலாம்.
அந்த வகையில் இன்றைக்கு இந்தியாவே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருப்பது பெண் பத்திரிக்கையாளர் பூனம் அகர்வால் ஆவார்.
வங்கிகள் மூலம் தேர்தல் நன்கொடை பத்திரம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதை பாஜக அரசு கொண்டுவந்தது.
இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைத் வழங்கியதை அடுத்து. இதுவரையும் 22,217 தேர்தல் பத்திரங்களை வழங்கியிருப்பதாகவும் SBI வங்கி தெரிவித்துள்ளது.
புலனாய்வு செய்வதற்காகத் தேர்தல் பத்திரத்தைத் தன் சொந்தச் செலவில் வாங்கி இவற்றை ட்ரூத் லேப் தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளார். இவற்றில் புறஊதா கதிர்களின் கீழ் தனித்துவ அடையாள எண் மறைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இவற்றை இரு முறை பரிசோதனை செய்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தங்களின் சொந்த ஆதாயத்துக்காக நாட்டில் உள்ள கார்ப்ரேட் நிறுவனத்திடம் பணம் பெறுவதையும், நாட்டின் கோடிக்கணக்கான பணம் அரசியல் கட்சிகளிடம் உள்ளதையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.
இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த விவரங்களைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.பாஜக வின் நவீன ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததை அடுத்து நாடு போற்றும் பெண்மணியாக பூனம் அகர்வாலும் ஒருவராகியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.