வாஷிங்டன் ஏப்ரல் 07
அமெரிக்கா, ரஷ்யா என இரு உலக வல்லரசுகள் இருந்தன.காலச்சூல் நிலையில் அமெரிக்கா தன்னை மட்டுமே ஒரே உலக வல்லரசாகப் நிலைநிறுத்தி வருகிறது.
அமெரிக்கா மற்ற நாடுகள் தனக்கு இணையில்லாத வகையில் தனக்கான ஆதாய அரசியல் செய்வதுண்டு.
இவற்றைச் சீனாவில் செய்து விட முடியாமல் போனது.விளைவு சீனாவில் அந்நாட்டின் அதிகாரத்தில், அதிபர் ஷி ஜின்பிங்கின் பிடி இறுகுவதாக இருந்துவருகிறது.
ஆசியப் பகுதியில் சீனா தன்னை மையமாக வைத்து சீன கம்யூனிஸ்ட் கட்சியை ஷி ஜின்பிங் மாற்றி அமைத்துள்ளார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவரை எதிர்ப்பதற்கு ஆளே இல்லை என்ற ஒற்றை தலைமையின் கீழ் சீனாவைக் கொண்டு வந்துள்ளார்.
ரஷ்யா,உக்ரைன் போர் தருணத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவு நிலையை மோடி தலைமையிலான அரசு எடுத்தது.இதில் முழுக்க கச்சா என்னை வியாபாரத்தை முன்னிறுத்தியே தவிர இந்திய மக்களுக்கானது அல்ல. உக்ரைன் போர் துவங்கிய நாட்களிலிருந்து ரஷ்யாவிற்க்கு ஆதரவு நிலையின் பலனாகக் கச்சா என்னைக் குறைந்த விலையில் பெற்று அன்று முதல் இன்று வரை நாட்டில் பெட்ரோல் விலை மாற்றம் பெறாமல் 104.00 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் கவனத்தைக்கொண்டு 102 ரூபாய்க்கு தற்காலிகமாக விற்கப்படுகிறது.இதன் மூலம் அதானி குழுமம், அம்பானியும் தான் பயன் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நாடாளுமன்றம் தேர்தலில் மீண்டும் மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் சீனா,ரஷ்யாவைத் தொடர்ந்து ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவும் மோடியின் சர்வாதிகார ஆட்சியில் பிடியின் கீழ் அமைந்துவிடும்.
சீனா,ரஷ்யாவை அடுத்து இந்தப் போக்கை அமெரிக்கா சர்வதேச அரசியலில் விரும்பவதி்லை. இந்தியா,அமெரிக்கா இடையே நல்லுறவு நீடிப்பதாக இரு நாடுகளும் தெரிவித்துக்கொண்டாலும். பல தருணங்களில் மோடி அரசின் மீது அமெரிக்கா அவநம்பிக்கையில் உள்ளது.மோடி அரசின் மதவாத போக்கு,குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தியபோது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
தற்போது கெஜ்ரிவால் விவகாரம், காங்கிரஸ் வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து மோடி அரசு மீது அமெரிக்கா தனது வேறுபாட்டை வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துள்ளது.
இது மோடி அரசுக்கும்,பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அளித்துள்ளது.