Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அத்திக்கடை மக்கள் நலச்சங்கம் அலுவலகம் திறப்பு விழா.
அத்திக்கடை முகமது நசூர்தீன் DME., Apr 15 2024 செய்திகள்

அத்திக்கடை மக்கள் நலச்சங்கம் அலுவலகம் திறப்பு விழா.

அத்திக்கடை ஏப்ரல் 14

திருவாரூர் மாவட்டம் அத்திக்கிடையில் பொதுநலச் சேவை அமைப்பான மக்கள் நலச் சங்கத்தின் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

அத்திக்கடை ஜமாத் தலைவர் A.A அப்துல் முகமது மற்றும் புருனை தொழில் அதிபர் M.T ஹிதயத்துல்லாஹ் அவர்கள் புதிய அலுவலகம் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். 

நிகழ்ச்சியில் ஜமாத் செயலாளர் சுல்தான் ஆரிப்,பொருளாளர் ஜெஹபர்தீன் ஊராட்சி துணைத்தலைவர் MMY ஜெஹபர் சாதிக்,ஜமாத் முன்னால் துணைத் தலைவர் அன்சாரி, திருவாரூர் மாவட்ட தமுமுக செயலாளர் சகாபுதீன்,ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஹலீல் மற்றும் சலீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜமாத் தலைவர் A.A.அப்துல் முகமது அவர்களுக்கு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் MMY ஜெஹபர் சாதிக் அவர்களும்,M.T.ஹிதயத்துல்லாஹ் அவர்களுக்கு மக்கல் நலச் சங்கத்தின் தலைவர் ஹாஜி அலி அவர்களும் பொன்னாடை அணிவித்து  வரவேற்றார்கள்.

இவர்களுடன் மக்கள் நலச் சங்கத்தினர் மன்சூர்,சலீம்,ஷாஜஹான்,நசூர்தீன்,

E.M.ஃபஜ்லூர் ரஹ்மான்,சாதிக், ஹாஜாமைதீன்,மஜக ஜெஹபர்சாதிக், மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

Related News