கொல்கத்தா ஏப்ரல் 17
சுதந்திர இந்தியாவில் பல தேர்தல்களை நாடு சந்தித்துள்ளது.எனினும் தற்போதைய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்பார்ப்புகள் போன்று கடந்தகாலத் தேர்தல் முடிவுகளை நாட்டு மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தது இல்லையெனலாம்.
இது நாட்டு மக்களின் மனநிலை மட்டுமல்ல மாநிலத்தை ஆளும் ஆட்சியாளர்கள்,மேற்கு வங்க முதல்வர்,தமிழக முதல்வர் உட்பட அனைவருக்கும் உண்டு எனலாம்.
சிறுபான்மை சமூக மக்களுக்கு நெருக்கடியான சட்டங்களை இயற்றியும். விவசாயிகள்,சிறு வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிப்பின் இறுதி நிலைக்குக் கொண்டுவந்துள்ளனர் பாஜக மோடி ஒன்றிய அரசு.
மாநில அரசுகள் பெயரளவில் தங்களுக்குச் சாதகமான அரசுகளை மட்டும் வைத்துக்கொண்டும்,பாஜகவை எதிர்க்கக்கூடிய அரசுகளை ஆட்சியில் இல்லாமல் ஆக்குவது என இவைகள் எல்லாம் மோடி,பாஜகவின் திட்டங்கள்.
இந்தத் தேர்தல் வெற்றியின் மூலம் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இனி ஜனநாயகமும் இருக்காது.தேர்தலும் இருக்காது.
இந்தத் தேர்தல் வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை என்று கூறியுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி.
பா.ஜ.க. முழு நாட்டையும் தடுப்பு முகாமாக மாற்றியுள்ளது என்று குற்றம்சாட்டிய மம்தா பானர்ஜி,
நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் CAA,NRC ரத்து செய்யப்படும் என்றும். அனைத்துப் பாரபட்சமான சட்டங்களையும் ரத்து செய்வோம் என கூறியுள்ளார்.
இந்தத் தேர்தல் என் வாழ்நாளில் இவ்வளவு ஆபத்தான தேர்தலைப் பார்த்ததில்லை. தனது கட்சி அனைத்து மதங்களையும் நேசிக்கிறது.நாட்டு மக்கள் மத அடிப்படையில் பிளவுபடுவதை நான் எப்போதும் விரும்பவில்லை.
இது வெறும் டிரெய்லர் தான் ஃபைனல் இன்னும் வரவில்லை என்று அவர் கூறினார்