Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அத்திக்கடையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. ஆர்வமுடன் வாக்காளர்கள் பங்கேற்பு.
நிருபர்:அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME., Apr 19 2024 செய்திகள்

அத்திக்கடையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. ஆர்வமுடன் வாக்காளர்கள் பங்கேற்பு.

அத்திக்கடை ஏப்ரல் 19

18வது மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் நடைபெறுகிறது.

ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மற்றும் அதிமுகவின் கூட்டணி என மும்முனைப் போட்டி தமிழ்நாட்டில் நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், வாக்காளர்கள் எவ்வித அச்சமின்றி வாக்குச் செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை ஊராட்சியில் காலை 7.00 மணி முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  ஆரம்பமானது.

ஊராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஆண்கள்,பெண்கள் என ஆர்வமுடன் வாக்குப் பதிவு அளித்து வருகின்றனர். அத்திக்கடை ஊராட்சியில் 50% க்கு மேல் தற்போதுள்ள நிலவரப்படி வாக்குப்பதிவாகிவுள்ளது.

எனவே, மக்கள் தங்களின் வாக்கைச் செலுத்தி ஜனநாயக கடமையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Related News