புதுடெல்லி ஏப்ரல்20
தனியார் தொலைக்காட்சி சேனல்களின் வருகையை அடுத்து அதன் நிகழ்ச்சிகள் மக்களின் மனம் கவரும் வகையில் ஒளிபரப்பு செய்யப்படுவதால் தூர்தர்ஷன் என்கிற தொலைக்காட்சிக்கு இருந்த வரவேற்புகள் நாட்டு மக்களிடத்தில் குறைந்து விட்டன.இந்த நிலையில் தற்போதைய ஒன்றிய அரசு நடத்தி வரும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல்களில் DD NEWS லோகோவை காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எங்கும் காவி,எதிலும் காவி என அரசியல் அதிகாரத்தை இதிலும் காட்சிப்படுத்துகிறது பாஜக மோடி அரசு.
எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தபோதிலும் பாஜக அரசு எப்போதும் போல் இவற்றையும் பெரியதாக எடுத்து கொள்ளப்போவதில்லை.
பாஜக அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சியின் நிறமான காவியைப் புகுத்தி வருகிறது.
அரசு நடத்தும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேனல் லோகோ சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் இது பேசுபொருளாக மாறியுள்ளது.
இது பற்றிய தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் DD News நிர்வாகம் வெளியிட்ட செய்தியில் “எங்களின் மதிப்புகள் அப்படியே இருக்கும் போது, நாங்கள் இப்போது ஒரு புதிய அவதாரத்துக்குத் தயாராக இருக்கிறோம். முன்னெப்போதும் இல்லாத செய்தி பயணத்துக்குத் தயாராகுங்கள். புதிய டிடி செய்திகளின் அனுவத்தைப் பெறுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினரும், பிரசார் பாரதியின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலருமான ஜவாஹர் சர்க்கார் இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிடும்போது, “தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க லோகோவை காவி நிறத்தில் மாற்றியிருப்பதை கவலையுடனும் எச்சரிக்கையுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். இது பிரசார் பாரதி அல்ல, பிரச்சார பாரதி” என்றும் குறிப்பிட்டுள்ளார்