அசாம் ஏப்ரல் 28
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பாஜக,காங்கிரஸ் இடையே கடும் வார்த்தைப் போர் உருவாகியுள்ளது.அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் மல்லியாகர்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவர் கூறியதாவது:-
இந்தியாவின் மதிப்புமிக்க வளங்களான ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை மோடி,அமித்ஷா ஆகிய இருவரும் விற்பனை செய்து வருகிறார்கள். இருவரும் கைதேர்ந்த விற்பனையாளர்கள்.
அனைத்தையும் விற்பனை செய்து விட்டனர்.அப்படி என்றால் இவற்றை வாங்குபவர்கள் யார்? அதானி, அம்பானி ஆகிய இரண்டு நபர்கள் தான் வாங்குபவர்கள். இவர்கள் கைகளுக்குச் சென்றால் நாடு எப்படி வளர்ச்சி அடையும்?.
அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக இல்லை. பிரதமர் மோடி நாட்டின் ஏழை மக்களிடம் இருந்து பணத்தைக் கொள்ளை அடித்து, அதைப் பணக்காரர்களுக்குக் கொடுத்துள்ளார். 16 லட்சம் கோடி ரூபாயைக் கோடீஸ்வரர்களுக்காகத் தள்ளுபடி செய்துள்ளனர். ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு அவர்கள் எதுவும் கொடுக்கவில்லை என இவ்வாறு தெரிவித்துள்ளார்.