ஃபரூக்காபாத் மே 20
உத்திரப்பிரதேசம் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றாகும்.நாட்டில் கல்வி,மக்களின் வாழ்க்கைத் தரம், என அனைத்திலும் உ.பி பின்தங்கி உள்ளன. இங்கு யோகி ஆதித்யாவின் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகள்,முஸ்லீம் வாக்காளர்கள் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்கு அளிப்பதைத் தடுப்பது என ஏராளமான இடையூர்கள் தரப்பட்டன.
இந்த நிலையில் 18 வயதுக்குக் குறைவான சிறுவன் ஒருவன் பாஜக ஆளும் உத்திரப்பிரதேசத்தில் நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில் 8 முறை வாக்களித்து இவற்றைத் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து தனது சாதனையை வெளியிட்டுள்ளான். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது இந்திய ஜனநாயகத்தின் தேர்தலை கேலி கூத்தாக்கியுள்ளது.வட மாநிலங்களில் பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற பாஜகவினர் முஸ்லீம்களைக் கடுமையான வார்த்தைகளின் மூலம் தாக்கித் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இது குறித்துத் தேர்தல் அணையத்திற்க்கு எதிர்க்கட்சிகள் புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இவர்கள் மீது இல்லை. இந்த நிலையில் தான் சிறுவன் 8 முறை பாஜகவிற்க்கு வாக்கு அளித்துள்ளான்.
நாடாளுமன்றத் தேர்தலிலும் பல முறைகேடுகள் வாக்கு எந்திரத்தின் மூலமும், வாக்காளர்களுக்குப் பதிலாக ஒரே நபர் பாஜகவிற்கு வாக்கு செலுத்தும் வீடியோ பதிவுகளும் வெளியாகவுள்ளது.இவைகள் அனைத்தும் வட மாநிலங்களில் நடைபெற்றுள்ளன.
இராணுவமும்,காவல்துறையும் உ.பி போன்ற மாநிலங்களில் செயலிழந்து உள்ளன.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல் பாஜகவின் தேர்தல் மோசடிகள், முறைகேடுகள் இவைகளே போதுமானது பாஜக கட்சி வெற்றி பெற்றதாக அறிவித்துவிடலாம். இதுபோன்று தேர்தல் நடத்துவதற்க்கும்,தேர்தல் வெற்றியை அறிவிப்பதற்க்கும் இந்திய தேர்தல் ஆணையம் என்கின்ற அமைப்பு அவசியமில்லாத ஒன்றாக நாட்டு மக்களின் தற்போதைய எண்ணங்களாகியுள்ளன.