ராஃபா மே 26
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இருப்பினும் போர் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று காசாவின் ராஃபா பகுதியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள தல் அல் - சுல்தான் பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.இதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும் பாலஸ்தீன செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் பல பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை இஸ்ரேலும் உறுதி செய்துள்ளது. ஆயிரம் பேர் இருந்த இந்த முகாமில் 2 ஹமாஸ் அமைப்பினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.