கன்னியாகுமரி மே 30
மே 30-ஆம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரியில் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் அமர்ந்து மூன்று நாள் தியானத்தில் ஈடுபடப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக அமையும் எனப் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,காங்கிரஸ் கட்சி புகார் மனு அளித்துள்ளது.
திமுகவின் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளன.
தியானம் மூலம் பிரதமர் மோடி, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் செயல் என்பதால் இது தேர்தல் விதி மீறல் நடவடிக்கையாகும் என SDPI கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஆகவே இந்த நிகழ்ச்சியைத் தேர்தல் ஆணையம் தடை விதிக்கவேண்டும். இது மறைமுகமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.