பொதக்குடி மே 31
ஜெ.ஜெயலலிதா மீது இட்டுக்கட்டிய பொய்மையை கட்டமைக்கிறார் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் A.M.தாஜ்ஜூதீன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா இந்து தெய்வ வழிபாடு கொண்டவர். தன் இந்துத்துவ (பாஜக) கொள்கைக்கு, 1999 ஆம் ஆண்டு, தமுமுகவின் முதல் வாழ்வுரிமை மாநாட்டில், பகிரங்கமான மன்னிப்பை இஸ்லாமிய மக்களிடத்தில் கோரினார். மேலும் பாஜக எனும் இந்துத்துவச் சக்திகளோடு கூட்டுச் சேர்ந்தது மிகப் பெரிய பாவமென்றும், இனி எந்தவொரு நிலையிலும் இந்துத்துவக் கொள்கை கொண்ட பாஜகவோடு கூட்டணி இல்லை என்று பிரகடனப்படுத்திய வாக்குறுதியை, ஜெ.ஜெயலலிதா இறக்கும் வரை காப்பாற்றியவர்.
அவர் இறக்கும் போது நல்ல இந்துவாகவும், மதநல்லிணக்க முதல்வராகவும் மறைந்தார்.ஜெ.ஜெயலலிதா ஒரு தீவிர இந்துத்துவ வாதியாக இறக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.