அத்திக்கடை ஜூன்03
திருவாரூர் மாவட்டம் அத்திக்கிடை,கூத்தாநல்லூர், பொதக்குடி,பூதமங்கலம்,எனச் சுற்றுப்புறப் பகுதிகளில் மிக கனமழை பெய்தது.
வழக்கமாக மே மாதம் முழுவதும் கோடை வெப்பம் அதிகளவில் காணப்படும்.கோடையில் பள்ளிக்கூடங்கள் விடுமுறை,வெப்பத்தைத் தனிக்க கொடைக்கானல், ஊட்டி எனச் மக்கள் சுற்றுலா செல்வது உண்டு.
தற்போது இந்த நிலை மாறி டெல்டா மாவட்டங்களில் சில தினங்களாகப் பரவலாகக் கோடைக்காலமாக உள்ள மே மாதங்களில் கனமழை பெய்துவருகிறது. நேற்றும்,இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 3.50 மணியளவில் துவங்கிய மழை 5 மணிவரை நீடித்து கடும் கனமழை பெய்தது. இந்த மழை இப்பகுதி மக்களுக்குக் கோடை வெப்பத்தைத் தனித்துக் குளிர்ச்சியளித்துள்ளது.